Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கும்பகோணம் » வானிலை

கும்பகோணம் வானிலை

கும்பகோணத்திற்கு செல்ல சிறந்த காலமாக கருதப்படுவது அக்டோபருக்கும் பிப்ரவரிக்கும் இடைப்பட்ட நாட்களே. இக்காலத்தில்தான் இதமான வெப்பநிலை நிலவி, பயணம் மேற்கொள்ளவும், இடங்களைச் சுற்றிப்பார்க்கவும் களைப்பை ஏற்படுத்தாமல், வசதியாக இருக்கும். மேலும் பல பண்டிகைகளும் விழாக்களும், இக்காலத்தில்தான் கொண்டாடப்படுவதால்,அது சுற்றுலாப்பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் எப்பொழுதும் நினைவில் கொள்ளக்கூடிய அனுபவத்தை அளிக்கும். இக்காலத்தில்தான் ஏராளமான சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் கும்பகோணத்திற்கு வருகை புரிகிறார்கள். எனவே கும்பகோணத்திற்கு சுற்றுலா செல்ல திட்டமிடும்பொழுது அக்டோபருக்கும் பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலங்களில் செல்லும் வகையில் திட்டமிடுங்கள்.

கோடைகாலம்

கும்பகோணத்தில் கோடைக்காலமானது  மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கிறது. கோடைகாலத்தில் காலநிலை மிக வெப்பமாகவும் ஈரப்பதத்துடனும் உள்ளது. கோடையில் சில நேரங்களில் மிக வறட்சியும் நிலவும். வெப்பநிலையானது 32℃ முதல் 38℃ வரை இருக்கும். அதிக வெப்பத்தினால் நீரிழப்பு ஏற்பட்டு மயக்கத்தை உண்டாக்கலாம் என்பதால், இக்காலத்தில் கும்பகோணத்திற்கு செல்வது உசிதமல்ல. 

மழைக்காலம்

ஜூன் மாத மத்தியில் தொடங்கும் மழைக்காலம் ஆகஸ்டு இறுதி வரை நீடிக்கிறது. மழைக்காலத்தில் கும்பகோணம் நகரத்தில் மிதமான மழை முதல் மிக அதிகமான மழை வரை பெய்கிறது. வெப்பநிலை நன்கு குறைந்து இதமான காலநிலை நிலவுகிறது. எனினும் மழைப் பொழிவினால் வெளியில் எங்கும் சென்று இட்ங்களைக் காண்பது கடினமானதாகிறது. இக்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் சொற்ப எண்ணிக்கையில் கும்பகோணத்திற்கு வருகிறார்கள். ஆயினும், மழை பெய்து உற்சாகத்தைக் குலைத்துவிடும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் இக்காலத்தில் இங்கு வருவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையான காலம் இங்கு குளிர்காலமாகும். எனினும், தென்னிந்தியாவிலுள்ள பிற முக்கிய நகரங்களை போலவே கும்பகோணத்திலும், குளிர்காலம் மிகக் குளிராக இருப்பதில்லை. இங்கு குளிர்காலம் இதமான மற்றும் மிதமான குளிருடன் நீடிக்கிறது. வெப்பநிலையானது 20℃-25℃ வரை நிலையாக உள்ளது. இரவில் மட்டும் தேவையானால் குளிருக்கு இதமான கம்பளிகளையோ, போர்வைகளையோ எடுத்துக்கொள்ளலாம்.