Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குருக்ஷேத்ரா » வானிலை

குருக்ஷேத்ரா வானிலை

வெப்பமான கோடைக்காலம் மற்றும் கடுமையான குளிர்காலம் ஆகிய பருவநிலை இயல்புகளை குருக்ஷேத்ரா பகுதி கொண்டுள்ளது.

கோடைகாலம்

மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் ஜுன் வரை நீடிக்கிறது. குருக்ஷேத்ரா நகரம் கோடைக்காலத்தில் 35°C  முதல் 42°C  வரை வெப்பநிலையை பெறுகிறது. சில சமயம் அதிகபட்சமாக 47°C  வரையில்கூட வெப்பநிலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மழைக்காலம்

ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. ஈரப்பதம் மற்றும் இறுக்கமான சூழல் ஆகியவற்றை கொண்டிருக்கும் மழைக்காலத்தில் அந்தி நேரங்களில் இனிமையான சூழல் நிலவுகிறது.

குளிர்காலம்

நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி வரை குளிர்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 7°C  தொடங்கி  20°C  வரை நிலவுகிறது.  குறைந்தபட்ச வெப்பநிலையாக 1°C  வரை காணப்படும்.