Search
  • Follow NativePlanet
Share

லாஹௌல் – மலைப்பூட்டும் மாய மலைத்திட்டுகள்!

11

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், இந்திய திபெத்திய எல்லையில் அமைந்துள்ளது லாஹௌல் மாவட்டம். இரண்டு வெவ்வேறு மாவட்டங்களாக இருந்து வந்த லாஹௌல் மற்றும் ஸ்பிதி, 1960 ம் ஆண்டு ஒரே மாவட்டமாக ஒருங்கிணைக்கப்பட்டன.

இங்குள்ள பூர்வீக குடிமக்கள்  சிகப்பு நிற தோல் மற்றும் பழுப்புநிற நிற கண்கள் உடைய இந்தோ ஆரிய மற்றும் திபெத்திய பரம்பரையில் வந்தவர்கள். அவர்களில் பெரும்பாலனவர்கள் புத்த மதத்தை கடைபிடித்து அவர்களின் பாரம்பரிய மத பழக்க வழக்கங்களை பின்பற்றுகின்றனர்.

இப்பகுதியில் பேசப்படும் மொழி லடாக் மற்றும் திபெத்திய மக்கள் பேசும் மொழியை ஒத்திருக்கும். இங்குள்ள மடங்கள் மீது சிறகடித்து பறந்துகொண்டிருக்கும் பிரார்த்தனை கொடிகள் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. அதோடு இந்த மடாலயங்கள் இப்பகுதி மக்களின் சமய பற்றினை பறைசாற்றுகின்றன.

தரிசு நில மண் காரணமாக, புற்கள் மற்றும் புதர்கள் மட்டுமே இங்கே வளர்கின்றன. உள்ளூரின் முக்கிய தொழில் உருளைக்கிழங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் நெசவு ஆகியன.

வீடுகள் 10 டிகிரி உட்புறமாக சாய்ந்த சுவர்கள் கொண்ட திபெத்திய பாணி கட்டிடக்கலையால் கட்டப்பட்டது. இந்த வீடுகள் கட்ட பயன்படுத்தப்படும் கட்டிட பொருட்கள் மரம், கற்கள், மற்றும் சிமெண்ட் ஆகியன அடங்கும்; இந்த பொருட்கள் பெரும்பாலும் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய சாத்தியகூறு உள்ள  பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

காட்டெருதுகள் மற்றும் கோவேறு கழுதைகள் போன்ற விலங்குகள் இப்பகுதியில் சுதந்திரமாக  சுற்றி திரிவதை காணலாம். இப்பகுதியில் காணப்படும் தாவர அடர்த்தி குறைவு காரணமாக  திபெத்திய மான், வரையாடு, கஸ்தூரி மான், மற்றும் பனிச்சிறுத்தைகள் போன்ற விலங்குகள் அருகிவரும் இனங்கள் பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ளன.

இப்பிராந்தியத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிகமாக ஈர்க்கும் இடமாக கிப்பர் கிராமம் அறியப்படுகிறது. இது அதன் மடாலயம் மற்றும் கிப்பர் வனவிலங்கு சரணாலயத்திற்கு பெயர் பெற்றது.

இப்பகுதியில் உள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த  மற்ற இடங்கள் பின் பள்ளத்தாக்குதேசிய பூங்கா, முக்கிய குருமடம், மற்றும் குன்சும் கணவாய் முதலியன ஆகும்.

லாஹௌல் அருகில் உள்ள விமான நிலையம் பூந்தார் விமான நிலையமாகும். இது புது தில்லி மற்றும் சிம்லா போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது.  விமான நிலையத்தில் இருந்து லாஹௌல் அடைய, டாக்சிகள் மற்றும் வாடகை வண்டிகள் வாடகைக்கு கிடைக்கும்.

ஜோகிந்தர் நகர் ரயில் நிலையம் லாஹௌலுக்கு மிக அருகிலுள்ள குறுகிய பாதை ரயில் நிலையமாகும். மேலும் அருகில் உள்ள மற்றொரு ரயில் நிலையமான சண்டிகர் ரயில் நிலையம் நேரடியாக பல முக்கிய இந்திய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சாலை வழியாக லாஹௌலுக்கு ரோதங் கணவாய், குன்சும் கணவாய், மற்றும் கின்னார் வழியாக செல்லலாம்.

லாஹௌல் சிறப்பு

லாஹௌல் வானிலை

சிறந்த காலநிலை லாஹௌல்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது லாஹௌல்

  • சாலை வழியாக
    தேசிய நெடுஞ்சாலை – 21 வழியாக மணாலி மற்றும் ரோதங்க் கணவாயில் இருந்து காஸா வழியாக லாஹௌலை சாலை வழியாக எளிதாக அடைய முடியும். ரோதங் கணவாய் நவம்பர் மாதம் மத்தியில் இருந்து மே மாதம் வரை மூடப்பட்டிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் குன்சும் கணவாய் லாஹௌலை அடைவதற்க்கு மற்றொரு வழி எனினும், மிகவும் விரும்பத்தக்க பாதை கின்னார் சாலை வழியாகும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஜோகிந்தர் நகர் ரயில் நிலையம் லாஹௌலுக்கு மிக அருகிலுள்ள குறுகிய பாதை ரயில் நிலையமாகும். மேலும் அருகில் உள்ள மற்றொரு ரயில் நிலையமான சண்டிகர் ரயில் நிலையம் நேரடியாக பல முக்கிய இந்திய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    லாஹௌலுக்கு அருகில் உள்ள விமான தளம் பூந்தார். இது சிம்லா மற்றும் புது தில்லி போன்ற முக்கிய நகரங்களோடு இணைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து லாஹௌலை அடைய விமான நிலையத்திற்கு வெளியே இருந்து டாக்சிகள் மற்றும் வாடகை வண்டிகள் பெறமுடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat