Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்ஷ்வதீப் » வானிலை

லக்ஷ்வதீப் வானிலை

ஈரப்பதம் நிறைந்த வெப்பப்பிரதேச பருவநிலையை லக்ஷ்வதீப் கொண்டுள்ளது. மழைக்காலம் முடியும் பருவத்திலிருந்து அதிகபட்ச கோடையின் அறிகுறிகள் தோன்றும் பருவம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் லட்சத்தீவுப்பகுதியின் சூழல் விரும்பத்தக்கதாக உள்ளது. ஆகஸ்ட் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட காலம் ரொம்ப சௌகரியமான பருவநிலை மற்றும் 22° C முதல் 30° C வரையிலான வெப்பநிலையுடன் காட்சியளிக்கிறது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் லக்ஷ்வதீப் 30° C க்கு அதிகமான வெப்பநிலையுடனும் சற்றே அசௌகரியமான் ஈரப்பதத்துடனும் காட்சியளிக்கிறது. எப்படியிருந்தாலும் பரவாயில்லை எனும் ஆர்வம் இருந்தால் மட்டுமே இக்காலத்தில் பயணம் மேற்கொள்ளலாம். இல்லாவிடில் கோடை கழிந்தபின்னர் அதாவது மே மாதத்துக்குப்பிறகு லட்சத்தீவுக்கு சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது.

மழைக்காலம்

இந்திய துணைக்கண்டத்திற்கு மழையைக் கொண்டுவரும் தென்மேற்குப் பருவக்காற்றுகளின் பாதையில் இந்த லட்சத்தீவுகள் அமைந்துள்ளன. எனவே மழைக்காலத்தின்போது மிகக்கடுமையான மழைப்பொழிவை லக்ஷ்வதீப் பெறுகிறது. மேலும் மழைக்காலத்தில் அதிக காற்றும் இப்பகுதியில் வீசுகிறது.

குளிர்காலம்

லக்ஷ்வதீப் பகுதியின் குளிர்காலமானது கடுமையான குளிரை கொண்டிருப்பதில்லை. கடற்கரைப் பொழுது போக்குகளுக்கு மிகவும் ஏற்ற வகையில் இக்காலத்தில் வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.மாலை நேரத்தில் 20° C வெப்பநிலை நிலவுவதால் கடற்கரை தீ வளர்த்து குளிர்காய்தல் மற்றும் ‘பார்பீக்யூ’ எனப்படும் ‘திறந்த வெளி அடுப்புச்சமையல்’ போன்ற பொழுதுபோக்குகளுக்கும் உகந்ததாக உள்ளது.