Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லாண்ஸ்டவுன் » வானிலை

லாண்ஸ்டவுன் வானிலை

நவம்பர்  மற்றும்  மார்ச்சிற்கு இடைப்பட்ட 5 மாத காலமே, லாண்ஸ்டவுனிற்கு சுற்றுலா செல்ல மிகச்சிறந்த பருவமாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

( மார்ச் முதல் ஜூன் வரை): லாண்ஸ்டவுனின்  கோடைகாலம் மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாதத்தில் முடிவடைகிறது.  இக்கோடை காலத்தில் லாண்ஸ்டவுனின் வெப்பநிலை 15 ° C முதல் 30 ° C  வரை மாறுபடுகிறது. இப்பகுதியின் கோடை காலம் மிகவும் இனிமையானது.  எனவே  இது , லாண்ஸ்டவுனிற்கு சுற்றுலா செல்ல உகந்த பருவமாக கருதப்படுகிறது.

மழைக்காலம்

( ஜூலை முதல் செப்டம்பர் வரை):  லாண்ஸ்டவுனில் பருவமழை ஜூலை மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் முடிவடைகிறது.  இந்த நேரத்தில், இங்கு பொழியும் மழையின் காரணமாக, காற்று ஈரப்பதம் மிகுந்து காணப்படும்.  எனினும், பயணிகள் இந்த நேரத்தில் இங்கு செழிப்பான பசுமையை அனுபவிக்கலாம்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): லாண்ஸ்டவுனின்  குளிர்காலம் டிசம்பர் மாதத்தில்  தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது. குளிர்காலத்தில், இவ்விடத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே   4° C,  மற்றும்  17° C.  இங்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதுண்டு.