Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லே » வானிலை

லே வானிலை

லே செல்வதற்கு, மார்ச் மற்றும் அக்டோபர் இடையில் உள்ள,  8 மாதங்கள் மிகவும் பொருத்தமானதாக  கருதப்படுகின்றன.  இம்மாதங்களில் நிலவும் இதமான  வெப்பநிலை காரணமாக, சுற்றுலா பயணிகள் மலையேறுதல், மற்றும் பிற சாகச நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு,  கண்ணுக்கினிய அழகிய காட்சிகளை அனுபவிக்க முடியும்.  இம்மாதங்களில்  இதமான  வெப்பநிலையே காணப்பட்டாலும்,  சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகளுடன் செல்வது நல்லது. இது அங்கு ஏற்படும் எதிர்பாராத கடுமையான வானிலையை சமாளிக்க உதவும்.

கோடைகாலம்

(மார்ச் முதல்  ஜூன் வரை): கோடை காலத்தில், லேவின் அதிகபட்ச வெப்பநிலை 33° C. இதன்  சராசரி வெப்பநிலை 20° C முதல் 30° C வரை  மாறுபடுகின்றது. கோடை காலத்தில் மிதமான  வெப்பநிலை நிலவுவதால், சுற்றுலா பயணிகள் லேவிற்கு கோடை காலத்தில் சுற்றுலா செல்வது நல்லது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): மழைக் காலத்தில், லே சராசரியாக  90 மிமீ  மழைப்பொழிவை பெறுகிறது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி  வரை): லேவின் குளிர்காலம்,  அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு  இடையே பரவியுள்ளது. குளிர்காலத்தில், இந்த பிராந்தியத்தில் மிக கடுமையான பனிப்பொழிவின் காரணமாக பனி கடி ஏற்படும்.  வெப்பநிலை -28° C  கீழே செல்வதால், இங்கு குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்படும்.