Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லோனாவலா » வானிலை

லோனாவலா வானிலை

சுற்றுலாப்பயணிகளிடையே மிகப்பிடித்தமான சுற்றுலாஸ்தலங்களில் ஒன்றாக லோனாவலா அறியப்படுகிறது. அதற்கான பல காரணங்கள் இந்தப்பகுதியில் நிறைந்துள்ளன. வார இறுதி நாட்களில் இது மும்பைவாசிகளுக்கான சிற்றுலாஸ்தலமாகவே மாறிவிடுகிறது. கூட்டமான மற்றும் மாசடைந்த பெருநகர சூழலிலிருந்து கொஞ்சம் புத்துணர்ச்சியளிக்கும் மாற்றத்தை விரும்பி அவர்கள் இங்கு ஆவலுடன் வருகை தருகின்றனர்.லோனாவலாவின் தட்பவெப்பம் ஆண்டு முழுவது பயணிகளை வரவேற்கும் வகையில் உள்ளது. வேறெந்த வெப்பப்பிரதேச மலைவாசஸ்தலத்தையும் தோற்கடிக்க வைக்கும் அளவுக்கு இங்கு இனிமையான சீதோஷ்ண சூழல் நிலவுகிறது. ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை சுற்றுலா பயணிக்கு இது வழங்குகிறது.எப்போது வேண்டுமானாலும் லோனாவலாவுக்கு செல்லலாம் என்றாலும் அக்டோபர் மற்றும் மே மாதத்துக்கு இடைப்பட்ட காலம் உகந்ததாக விளங்குகிறது.

கோடைகாலம்

பெரும்பாலும் கோடைக்காலத்தில் லோனாவலாப்பகுதி மிதமான வெப்ப நிலையைக் கொண்டதாக உள்ளது. அச்சமயம் வெப்பநிலை அதிகபட்சம் 30 -350C ஆகக்காணப்படுகிறது. அவ்வப்போது மழை மற்றும் எப்போதும் இருக்கும் மலைக்காற்று என்று இந்த மலை ஸ்தலம் கோடையிலும் இனிமையான சூழலைக்கொண்டுள்ளது.

மழைக்காலம்

மழைக்காலத்தில் இந்த மலை வாசஸ்தலம் ஒரு சொர்க்கம் போன்றே காட்சியளிக்கின்றது. ஜுன் மத்தியில் இருந்து செப்டம்பர் மாதம் வரை கடுமையான தென்மேற்கு பருவ மழையைப்பெறுகிறது. இப்பருவத்தில் இங்கு சராசரி மழை அளவு 450 செ.மீ என்ற அளவில் உள்ளது. இக்காலத்தில் இயற்கையின் சூட்சுமமாய் ஜொலிக்கும் இந்த ஸ்தலத்தின் இயற்கை அழகை பார்த்து ரசிப்பதற்காக எல்லாத் திசைகளிலிருந்தும் பயணிகள் வருகின்றனர். மழையின் வாசனை இப்பிரதேசமெங்கும் வியாபித்திருக்கும் மழைக்காலம் லோனாவலா பிரதேசத்தின் எழிலை தரிசிக்க ஏற்றதாக உள்ளது.

குளிர்காலம்

குளிர்காலத்தில் லோனாவலா ஸ்தலத்தில் வெப்பநிலை மிகவும் குறைந்து குளிருடன் காணப்படுகிறது. வெப்பநிலை குறைந்த பட்சமாக 120C என்ற அளவில் உள்ளது. பகலில் மிதமான வெப்பத்துடனும் இனிமையான சூழலுடனும் இரவில் குளிருடனும் இப்பருவத்தில் காணப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சமயங்களில் இது விரும்பப்படும் சுற்றுலா ஸ்தலமாக திகழ்கிறது.