Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மதுபானி » வானிலை

மதுபானி வானிலை

மதுபானிக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் சுற்றுலா வருவதே மிகவும் சிறந்தது. இந்தப் பருவத்தில் மிகவும் இனிமையான மற்றும் ஈரப்பதம் மிகுந்த சிறந்த வானிலையே நிலவுகின்றது. 

கோடைகாலம்

மதுபானியின் கோடைகாலம் மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கின்றது. கோடைகாலத்தில் மதுபானியின் வெப்பநிலை 35 மற்றும் 45 டிகிரி செல்ஸியஸாக பதிவாகும்.

மழைக்காலம்

பருவமழை மதுபானிக்கு சிறந்த மழைப் பொழிவை கொண்டு வருகிறது. இங்கு அக்டோபர் மாதத்தில் தொடங்கும் பருவமழை டிசம்பர் வரை நீடிக்கின்றது. இந்தப் பருவத்தில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஈரப்பதம் மிகுந்த மிதமான மற்றும் லேசான வெப்பநிலையை அனுபவிக்கலாம். இந்தப் பருவத்தில் இந்த  இடத்தில் உள்ள  தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பயணிகளை மயக்குகின்றது.

குளிர்காலம்

மதுபானியின் குளிர்காலம் மிகவும் குறுகியது. இங்கு ஜனவரியில் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரியில் முடிவடைகிறது. குளிர்காலத்தில் மதுபானியின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 5 டிகிரி செல்ஸியஸ் மற்றும் 10 டிகிரி செல்ஸியஸ் ஆகும். மதுபானி சுற்றுலாவிற்கு குளிர்காலமே மிகவும் சிறந்தது. ஆயினும் குளிர்காலத்தில் இங்கு சுற்றுலா வரும் பயணிகள் தங்களுடன் கம்பளி உடைகளை உடன் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.