Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மஹாபலேஷ்வர் » வானிலை

மஹாபலேஷ்வர் வானிலை

மிதமான பருவநிலையை எப்போதும் கொண்டிருப்பதால் ஆண்டில் எக்காலத்திலும் இப்பகுதியை விஜயம் செய்யலாம். எனினும் குளிர்காலம் மழைக்காலமும் விஜயம் செய்ய சிறந்ததாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

கோடைக்காலம் மார்ச்சிலிருந்து ஜூன் மாதம் வரை நிலவுகிறது. இது இப்பகுதியை சுற்றிப்பார்க்க உகந்த காலமாகும். இப்பருவத்தில் வெப்பநிலை 18°C யிலிருந்து 29°C ஆக காணப்படும். பகல் பொழுதில் மித வெப்பமாக காணப்பட்டாலும் மஹாபலேஷ்வர் 4718 அடி உயரத்தில் இருப்பதால் வெப்பநிலை அதிகம் உயராமல் குளுமையான தென்றல் எப்போதும் இப்பகுதியை சூழ்ந்திருப்பது மிக விசேஷம்.

மழைக்காலம்

ஜூன் முதல் செப்டம்பர் வரி மஹாபலேஷ்வர் பகுதியில் மழைக்காலமாகும். அச்சமயம் இப்பகுதிய வசீகரமான இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாய் உருவாற்றம் பெறுவது குறிப்பிடத்தக்கது. தேனிலவுக்காய் இப்பகுதிக்கு வரும் தம்பதிகளுக்கு இது மிகவும் உகந்த காலம் ஆகும்.

குளிர்காலம்

டிசம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரையில் மஹாபலேஷ்வரில் குளிர் காலம் நிலவுகிறது. இப்பருவத்தில் குளிர்ச்சி அதிமாக 5°C யிலிருந்து 24°C வரை காணப்படுகிறது. அருகில் உள்ள பெருநகரங்களின் இந்த மலை வாசஸ்தலத்தில் புகழ் வெகுவாக பரவியிருப்பதால் இந்த கால கட்டத்தில் கிருஸ்தமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.