Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மாஹே » வானிலை

மாஹே வானிலை

அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே மாஹே செல்ல ஏற்றதாகும். இக்காலத்தில், இங்கு தட்பவெப்பநிலை மற்றும் பொதுவான வானிலை, எவ்வித சிரமமும் இன்றி சுற்றிப் பார்க்க, ஏதுவாக இருக்கும். இங்குள்ள பிரபலமான இடங்கள் பல, இக்காலத்திலேயே, அதிக பயணிகள் கூட்டத்தை எதிர்கொள்கின்றன. 

கோடைகாலம்

மாஹேவின் கோடைகாலங்கள், வழக்கமாக மிகவும் வெப்பமானவையாக உள்ளன. அதனால், இக்காலத்தில் இங்கு செல்வது உசிதமல்ல. வெப்பம் மிக அதிகமாக இருப்பதனால், கொஞ்சம் கவனக்குறைவாக இருப்பினும், உடல் நீர்க் குறைவு, கடும் வெப்பத்தினால் ஏற்படும் மயக்கம், மற்றும் வியர்க்குரு, ஆகியவையினால் அவதிப்பட நேரிடலாம்.

மழைக்காலம்

இக்காலத்தின் போது, இங்கு நல்ல மழைப்பொழிவு இருக்குமாதலால், சுற்றுலா மற்றும் பயணங்கள் சிரமமாக இருக்கும். பெரும்பாலான சமயங்களில், மழை எப்போது வரும் என்பதை அறுதியிட்டுக் கூற இயலாது. அத்னால், சுற்றுலாப் பயணிகள், இச்சமயத்தில் இங்கு செல்வதாக இருந்தால், மழைக்கோட் அல்லது குடை கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குளிர்காலம்

இக்காலத்தில், இங்கு தட்பவெப்பநிலை 20-25° செல்சியஸ் ஆக இருப்பதினால், மாஹே, மிக ரம்மியமாக காட்சியளிக்கும். இங்குள்ள வனப்புகளை ரசிக்க விரும்புவோர் இங்கு வருவதற்கு ஏற்ற சமயம் இதுவேயாகும். மாஹேவில், இக்குளிர்கால மாதங்கள், சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து, பரபரப்பான காலகட்டமாகக் காணப்படுகிறது.