Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மஹேஷ்வர் » வானிலை

மஹேஷ்வர் வானிலை

மழைக்காலம் மற்றும் குளிர்காலங்கள் மஹேஷ்வர் செல்ல ஏதுவான காலகட்டங்களாகும். மேலும், சுற்றுலாத் திட்டங்களுக்கு சாதகமான வானிலை நிலவக்கூடிய குளிர்காலமான அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டமே இங்கு செல்வதற்கு ஏற்ற காலகட்டமாகும். இவ்விடம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள காரணத்தினால், மஹா சிவராத்திரி கொண்டாடப்படும் சமயமான பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களும் இங்கு செல்வதற்கு பொருத்தமான காலங்களாகும்.                 

கோடைகாலம்

மஹேஷ்வரில் கோடை காலங்கள் மிகவும் வெப்பமாகவும், வறட்சியுடனும் காணப்படும். இச்சமயத்தில் இங்கு குறைந்த பட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்; மெர்க்குரியின் அளவு சுமார் 42 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். கோடைகாலம் மார்ச் மாதத்தில் ஆரம்பித்து ஜூன் மாதம் வரை நீடிக்கும். மே மாதம் உச்சபட்ச வெப்பநிலையுடன், 45 டிகிரி வரை உயர்ந்திருக்கும் மெர்க்குரி அளவுடன் காணப்படும். கோடைகாலம் மஹேஷ்வர் செல்ல ஏதுவான காலகட்டம் அல்ல.  

மழைக்காலம்

மழைக்காலம் ஜூலை மாதம் ஆரம்பித்து செப்டம்பர் மாதம் வரை தொடர்கின்றது. இந்த மழைக்கால மாதங்கள் மஹேஷ்வரின் அற்புதமான காலகட்டம் ஆகும். இங்கு மழைப்பொழிவு ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டுவதில்லை; அதனால், இக்காலத்தில் இங்கு சென்றாலும் சுற்றிப் பார்ப்பதற்கு தடையேதும் இருக்காது. மழைக்காலத்தில் இங்கு வானிலை மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.

குளிர்காலம்

மஹேஷ்வரில் குளிர்காலமும் தீவிரமாக அல்லாது, சராசரி வெப்பநிலை குறைந்த பட்சமாக 19 டிகிரி செல்சியஸாக மட்டுமே இருக்கும். நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களே இங்கு குளிர்கால மாதங்கள் ஆகும். குளிர்ச்சியான மற்றும் இதமான வானிலை நிலவும் குளிர்காலத்தில் மஹேஷ்வர் வந்து தங்கும் பயணிகள் நிச்சயம் தங்கள் சுற்றுலாவை ரசிப்பர். மேலும், இக்காலம் சுற்றிப் பார்ப்பதற்கு உகந்த ரம்மியமான வானிலையைக் கொண்டிருக்கும்.