Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மாஜூலி » வானிலை

மாஜூலி வானிலை

மாஜூலி தீவிற்கு சுற்றுலா மேற்கொள்ள குளிர்காலமே மிகவும் ஏற்றதாகும். இக்காலத்தில் வெப்பநிலை கடுமையாக இல்லாமல் இதமானதாக உள்ளது. மேலும் பிரம்மபுத்ரா அதிக வேகம் இல்லாமல் அமைதியாக ஓடுவது ஃபெர்ரி போக்குவரத்திற்கு ஏற்ற அம்சமாகவும் கருதப்படுகிறது. எனவே குளிர்காலத்தின்போது மாஜூலி தீவுப்பகுதியில் சுற்றுலா செயல்பாடுகள் தீவிரமடைந்து காணப்படுகின்றன.

கோடைகாலம்

மாஜூலி தீவுப்பகுதியில் மார்ச் முதல் மே வரை கோடைக்காலம் நீடிக்கிறது. குறிப்பாக மே மற்றும் ஜுன் மாதங்களில் கடும் உஷ்ணம் இப்பகுதியில் நிலவுகிறது. சராசரியாக இக்காலத்தில் 25°C துவங்கி அதிகபட்சம் 43°C வரை வெப்பநிலை நிலவக்கூடும். கோடைக்காலத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் கடும் உஷ்ணம் போன்றவை மாஜூலி தீவுப்பகுதியை ஆக்கிரமித்துவிடுகின்றன.

மழைக்காலம்

ஜுலை மாதம் துவங்கி செப்டம்பர் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இந்த பகுதியின் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். எனவே மழைக்காலத்தில் பெரும்பாலான தீவுப்பகுதி நீரில் மூழ்கி காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் இத்தீவுப்பகுதி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்தாலும் சுற்றுலா மேற்கொள்வதை தவிர்ப்பதே சிறந்தது.

குளிர்காலம்

டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை மாஜூலி தீவுப்பகுதியில் குளிர்காலம் நிலவுகிறது. குளிர்காலத்தின்போது 7°C துவங்கி அதிகபட்சம் 18°C வரை வெப்பநிலை நிலவுகிறது. மெலிதான உல்லன் உடைகளுடன் பயணிப்பது இந்த குளிரை சமாளிக்க உதவியாக இருக்கும். மழைக்காலத்திற்கு பின்பு வரும் பருவம் என்பதால் இத்தீவுப்பகுதி தூய்மையான பசுமையுடன் இக்காலத்தில் காட்சியளிக்கிறது.