Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மலானா » வானிலை

மலானா வானிலை

மலானாவிற்கு சுற்றுலா வர சிறந்த காலம் கோடைகாலமாகும். இந்த காலகட்டத்தில் வெப்பநிலையானது வசதியானதாகவும், ரசிக்கத் தகுந்ததாகவும் இருப்பதால், இக்காலம் இவ்விடத்தை சுற்றிப்பார்க்க ஏற்றதாக இருக்கும்.

கோடைகாலம்

ஏப்ரல் மாதம் கோடையின் துவக்கத்தை மலானாவில் அறிவிக்கும் மாதமாகும். இந்த காலத்தில் மலானாவின் வெப்பநிலை 10 டிகிரி முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இரவு நேரங்களில் இந்த வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்புகள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மென்மையான கம்பளி ஆடைகளை இந்த சீசனில் எடுத்து வருவது நல்லது.

மழைக்காலம்

ஜீலை மாதத்தில் தொடங்கும் மழைக்காலம் ஆகஸ்டு மாதம் முடியும் வரை மலானாவில் நீடிக்கும். சுற்றுலாப் பயணிகள் மலானாவிற்கு ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் வரலாம்.

குளிர்காலம்

நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நீடித்திருக்கும் குளிர் காலத்தில் மலானாவின் வெப்பநிலை பூஜ்யத்திற்கும் குறைவாக சென்று விடும். இந்த காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 10 டிகிரியாக இருக்கும்.