Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மால்ஷேஜ் காட் » வானிலை

மால்ஷேஜ் காட் வானிலை

பொதுவாக மால்ஷேஜ் காட் சுற்றுலாத்தலம் ஆரோக்கியமான இனிமையான பருவநிலையை வருடமுழுவதும் கொண்டிருக்கிறது. சராசரி வெப்பநிலையாக 27°C எப்போதும் காணப்படுகிறது.  எனவே இந்த சுற்றுலாத்தலத்திற்கு எல்லாக்காலத்திலும் பயணம் மேற்கொள்ளலாம். இருப்பினும் மழைக்காலமும் மழைக்குப்பிந்தைய குளிர்காலமும்  ஊர் சுற்றி பார்க்கவும் இயற்கையை ரசிக்கவும் மிகவும் ஏற்றதாக உள்ளன.

கோடைகாலம்

மால்ஷேஜ் காட் பிரதேசத்தில் கோடைக்காலம் மார்ச் முதல் மே மாதம் வரை நீடிக்கின்றது. உஷ்ணம் அதிகமாக காணப்படும் இக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35°C  வரையிலும் உயர்ந்து காணப்படும்.

மழைக்காலம்

மால்ஷேஜ் காட் பகுதியை விஜயம் செய்து சுற்றிப்பார்த்து மகிழ்வதற்கு மழைக்காலம் மிகவும் ஏற்ற பருவமாகும். ஜுன் முதல் முதல் நவம்பர் வரை நிலவும் மழைக்காலத்தில் இப்பகுதி சராசரியான மிதமான மழைப்பொழிவைப் பெறுகிறது. இக்காலத்தில் இப்பிரதேசம் முழுவதும் இயற்கை எழில் இன்னும் பசுமை கூடி காட்சியளிக்கிறது.

குளிர்காலம்

மால்ஷேஜ் காட் பகுதியில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்காலம் நிலவுகிறது.  இக்காலத்தில் வெப்பநிலை  15°C வரையிலும் குறைந்து குளுமையுடன் காணப்படுகிறது. குளிர்காலத்தில் மால்ஷேஜ் காட் சுற்றுலாத்தலம் ஒரு சொர்க்கம் போன்றே காட்சியளிப்பதால் இது பயணத்துக்கு ஏற்றதாகும். மலையேற்றம் மற்றும் மலை நடைப்பயணம் போன்றவற்றுக்கும் ஏற்றதாக குளிர்காலம் அமைந்துள்ளது.