மணாலி சுற்றுலாத்தலத்தில் உள்ள இந்த கிளப் ஹவுஸ் ஹிமாசல் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தினால் (HPTDC) நிர்வகிக்கப்படுகிறது. இந்த கிளப் ஹவுஸ் வளாகத்தில் பயணிகள் பல்வேறு உள் மற்றும் வெளி விளையாட்டு அம்சங்களில் ஈடுபடலாம்.
பஸ் அல்லது டாக்சி மூலம் எளிதாக செல்லும்படியாக உள்ள இந்த கிளப் ஹவுஸ் பில்லியர்ட்ஸ் ரூம், லைப்ரரி, ஆடிட்டோரியம், கேரம் போர்ட் ரூம், ரோலர் ஸ்கேட் தளம் மற்றும் மதுக்கூடம், உணவகம் போன்ற பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்களை பயணிகளுக்காக கொண்டுள்ளது.