மண்டு ஒரு சிறிய நகரமாக இருந்தாலும், விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளில் அடையக் கூடிய நகரமாகவே உள்ளது. மண்டுவிற்கு அருகிலுள்ள விமான நிலையமான இந்தூர் விமான நிலையம் சுமார் 100 கிமீ தொலைவில் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து டெல்லி, மும்பாய், குவாலியர் மற்றும் போபால் போன்ற நகரங்களுக்கு தொடர்ச்சியான விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.