Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மண்டு » வானிலை

மண்டு வானிலை

ஒவ்வொரு சுற்றுலாப் பயணியின் கட்டுப்பாட்டிலும் இல்லாத காரணிகள் பலவும் சேர்ந்து தான் ஒரு சுற்றுலாத் தலத்திற்கு வருவதற்கு ஏற்ற சிறந்த பருவத்தை உருவாக்குகின்றன. அந்த வகையில் மண்டுவிற்கு சுற்றுலா வந்து மகிழ்ந்திருக்க ஏற்ற பருவமாக ஜுலை முதல் மார்ச் மாதம் வரையிலான மாதங்கள் உள்ளன. வழக்கமாகவே செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலும் நடக்கும் கணேஷ் சதுர்த்தி திருவிழாவின் போது பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் மண்டுவின் சுற்று வட்டாரத்தில் குவிந்து கொண்டிருப்பது வழக்கம்!

கோடைகாலம்

கோடைக்காலத்தில் சமவெளிகளில் நிலவும் கடும் வெப்பநிலையுடன் கூடிய பருவநிலை நிலவி வரும் போது, கடல் மட்டத்திலிருந்து 2000 அடிகள் உயரத்திலிருக்கும் மண்டுவில் சற்றே குளிராக இருக்கும்! கோடைக்காலத்தில் மண்டுவின் வெப்பநிலை 20 டிகிரி முதல் 35 டிகிரி வரையிலும் இருக்கும்.

மழைக்காலம்

ஒரு காலத்தில் டெல்லியின் முகலாய பேரரசர்களுக்கு மழைக்கால ஓய்விடமாக மண்டு இருந்து வந்தது. அந்த புகழ் மிக்க மழைக்கால பருவநிலை, புதிய அர்த்தத்துடன் இன்றைய மழைக்காலங்களில் புகழ் பெற்று வருகிறது. மகிழ்ச்சியான வெப்பநிலையும், மிதமான மழைப்பொழிவும் இருக்கும் அற்புதமான மழைக்காலத்தில், சுட்டெறிக்கும் சூரியனிடமிருந்து சுற்றுலாப் பயணிகள் தப்பி விட முடியும் என்பதால் இந்த பருவநிலையின் போது பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் மண்டுவிற்கு வருகை தருவது வழக்கம்.

குளிர்காலம்

அதி வெப்பமான கோடை நாட்களை விடுத்து, குளிர்ச்சியான பருவநிலையை அனுபவிக்க விரும்புபவர்கள் குளிர்காலத்தில் மண்டுவிற்கு வருவது சிறந்த அனுபவத்தைத் தரும். இந்நாட்களில் மண்டுவின் பருவநிலை 7 டிகிரி முதல் 22 டிகிரி வரையிலும் இருக்கும். இந்நாட்களில் இளம் சிறார்களை வைத்திருக்கும் குடும்பத்தினர் பலரும், அவர்களுடைய விடுமுறைக் காலங்களை கழிக்க முதல் வாய்ப்பான இடமாக மண்டுவைக் கருதுகின்றனர்.