சோமேஷ்வர் கடற்கரை, மங்களூர்

மங்களூருக்கு 18 கி.மீ தெற்கே அமைந்துள்ள இந்த கடற்கரை காற்றில் அசைந்தாடும் பனை மரங்கள் வரிசையாய் பின்னணியில் இருக்க தூய மணலுடன் காணப்படுகிறது.

இந்த கடற்கரையில் ருத்ர ஷீலா எனும் பெரிய பாறை காணப்படுகிறது. அப்பக்கா தேவி எனும் அரசியால் கட்டப்பட்ட ஒரு கோயில் ஒன்றும் இங்குள்ளது.

அரபிக்கடலின் சாந்தமான அழகை இந்த கடற்கரையில் கண் குளிர கண்டு ரசிக்கலாம். கோயிலிலிருந்து அரை கி.மீ தொலைவில் உள்ள சோமேஸ்வரா பஸ் நிலையத்திலிருந்து இந்த கடற்கரைக்கு செல்ல்லாம்.

மேலும் கோயிலின் அருகில் ஒரு அரண்மனை மட்டும் கோட்டையின் இடிபாடுகளும் காணப்படுகின்றன.இது தவிர இந்த கடற்கரையில் 100 அடி உயர கலங்கரை விளக்கும் காணப்படுகிறது. இதில் மேலே சென்று அரபிக்கடலை பார்த்து மகிழலாம்.

இந்த இடத்தின் ஏகாந்தமும் தனிமையும் அனுபவிக்க வேண்டிய ஒன்றாக கூறலாம்.  ஓவியம் போன்ற இந்த கடற்கரையும் அஸ்தமனத்தின் போது தங்க நிறத்தில் ஜொலிக்கும் வானின் அழகும் மனதை கொள்ளை கொள்பவை.

ஒரு மகத்தான  சுற்றுலா ஸ்தலத்துக்கான எல்லா தகுதிகளையும் கொண்டுள்ள இந்த கடற்கரை ஏனோ அரசாங்கத்தின் கவனத்துக்குள் வரவில்லை. NH 66 நெடுஞ்சாலை கடற்கரை அருகில் உள்ள கோயில் வரை செல்வது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...