Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மங்களூர் » வானிலை

மங்களூர் வானிலை

மங்களூரை சுற்றிப் பார்க்க ஈரப்பதமற்ற அதன் பனிக் காலமே சிறந்தது.

கோடைகாலம்

மங்களூர் பகுதி வெப்பமும் ஈரப்பதமும் வருடம் முழுவதுமே அதிகம் காணப்படும் பிரதேசமாகும். கோடைக்காலத்தில் மங்களூர் மிக வெப்பத்துடன் காணப்படுகிறது. கோடையில் இங்கு வெப்பநிலை 240C யிலிருந்து 340C வரைக்கும் இருக்கும். (82.40F – 93.20F)

மழைக்காலம்

ஜூனிலிருந்து செப்டம்பர் வரையில் இங்கு மழை பொழிவு காலமாகும். இந்த காலகட்ட்ததில் இங்கு ஈரப்பதம் அதிகமாக காணப்படும். சராசரி மழை அளவு 759 மி.மீ அல்லது 30 அங்குலம் என்ற அளவில் இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலை அருகில் இருப்பதால் மங்களூரில் மழை பொழிவு அதிகமாக இருக்கும்.

குளிர்காலம்

காற்றில் ஈரப்பதம் குளிர்காலத்தில் மங்களூர் பகுதியில் குறைந்து காணப்படுகிறது. டிசம்பரிலிருந்து மார்ச் வரைக்கும் உலர்ந்த காற்று மற்றும் குளிர் நிலவுவதால் இந்த பருவமே சுற்றுலாப் பயணிகளுக்கு மங்களூரை பார்க்க அனுபவிக்க சிறந்த பருவமாகும். குளிர்காலத்தில் வெப்பநிலை 300C-யிலிருந்து 190C வரைக்கும் இருக்கும். (860F – 660F)