Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மணிகரன் » வானிலை

மணிகரன் வானிலை

மணிகரன் சுற்றுலாத்தலத்துக்கு விஜயம் செய்து ரசிக்க விரும்பும் பயணிகள் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையான கோடைப்பருவத்தில்  பயணம் மேற்கொள்ளலாம்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை) : மணிகரன் சுற்றுலாத்தலத்தில் ஏப்ரல் தொடங்கி ஜூன் வரை  கோடைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 16°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 6°C வெப்பநிலையும் நிலவுகிறது.

மழைக்காலம்

( ஜூலை முதல் செப்டம்பர் வரை) : மணிகரன்  சுற்றுலாத்தலத்தில் ஜூலை மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரையில் மழைக்காலம் நிலவுகிறது. வருடமுழுதுமே மிதமான மழைப்பொழிவை இப்பகுதி பெறுகின்ற போதிலும் மழைக்காலத்தில் மிக அதிகபட்சமான மழைப்பொழிவை பெறுகிறது. சராசரியாக 8°C வெப்பநிலை இக்காலத்தில் நிலவுகிறது.

குளிர்காலம்

( நவம்பர் முதல் மார்ச் வரை) : மணிகரன்  சுற்றுலாத்தலத்தில் நவம்பர் மாதம் துவங்கும் குளிர்காலம் மார்ச் வரை நீடிக்கிறது. ஹிமாசலப்பிரதேசத்தின் மற்ற எந்த பகுதியை விடவும் மிகவும் கடுமையான குளிர் இப்பிரதேசத்தில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  இக்காலத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக -8°C யிலிருந்து அதிகபட்சமாக 3°C வரை மட்டுமே நிலவுகிறது. கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு காணப்படுவதால் இக்காலத்தில் மணிகரன் நகருக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.