மயுர்பஞ்சின் மாவட்ட தலைமையகமாக விளங்குகிறது பரிபடா. பரிபடாவில் தான் சிமிலிபல் தேசிய பூங்காவும் உள்ளது. மயுர்பஞ்சை சேர்ந்த சௌ நடன பயிர்ச்சியாளர்கள் பலரும் பரிபடாவை சேர்ந்தவர்களாக விளங்குவதால் மயுர்பஞ்சின் பண்பாட்டு மற்றும் கலைகளுக்கும் பரிபடாவே தலைமையகமாக விளங்குகிறது.
இவ்வகை நடனங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக நேரடியாக கண்டுகளிக்க வேண்டும். பரிபடாவின் மற்றோரு அடையாளமாக விளங்குகிறது இங்கு கொண்டாடப்படும் பாரம்பரிய ரத யாத்திரை திருவிழா.
பூரிக்கி பிறகு, இத்திருவிழா பரிபடாவில்தான் மிக பிராம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இது ஜெகநாத் கடவுளுக்கு மரியாதை செலுத்துவதற்காக கொண்டாடப்படும் திருவிழா ஆகும்.
இந்த நகரத்தை ஒடிசாவில் உள்ள இரண்டாவது பூரி என்றும் கூட அழைப்பார்கள். பரிபடாவில் சுபத்ரா மாதாவின் தேரை பெண் பக்தர்கள் மட்டுமே இழுத்துச் செல்வார்கள்.
உலகத்தின் கடவுளாக கருதப்படும் ஜகதத்ரி மாதாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் திருவிழா ஜகதத்ரி மேளா. வாழ்க்கை மற்றும் பண்பாட்டை ஆன்மீக கலவையோடு கொண்டாடுவதே பரிபடாவின் சிறப்பாகும். இந்நகரத்தை விட்டு நீங்கள் கிளம்பிய பின்னரும் கூட இவ்வகை கொண்டாட்டங்கள் உங்கள் மனதில் பல ஆண்டுகளாக நீடித்து நிற்கும்.



Click it and Unblock the Notifications