Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மயுர்பஞ்ச் » வானிலை

மயுர்பஞ்ச் வானிலை

குளிர் காலத்தில் தான் மயுர்பஞ்ச் ரம்மியமான காட்சிகளை அள்ளிக் கொடுக்கும். தீபாவளியும், நவராத்திரியும் கூட குளிர் காலத்தின் போது இங்கே கொண்டாடப்படுகிறது. இந்நேரத்தில் இங்கு இருப்பது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கும். அதே போல் சிமிலிபல் தேசிய பூங்காவின் வனவிலங்குகளை மழை குறைவாக இருக்கும் குளிர் காலத்தின் போது கண்டுகளிக்கவே நன்றாக இருக்கும்.

கோடைகாலம்

மயுர்பஞ்சில் கோடைக்காலம் சுற்றுலாப் பயணிகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். அதனால் இந்நேரத்தில் இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவின் கோடைக்காலத்தை சிறந்ததாக கருதுவார்கள். இந்நேரத்தில் வெப்பமும் வறண்ட வானிலையும் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தான் தட்ப வெப்ப நிலை 35° செல்சியஸ் வரை சென்று அதிக வெப்பத்துடன் நிலவும்.

மழைக்காலம்

மயுர்பஞ்சில் மழைக்காலம் தான் நீண்ட காலமாக விளங்குகிறது. மே மாத இறுதியில் தொடங்கும் மழைக்காலம் அக்டோபர் தொடங்கும் வரை நீடிக்கும். இருப்பினும் ஆகஸ்ட் மாதத்தில் தான் கன மழை பெய்யக் கூடும். இக்காலத்தில் வெப்பநிலை 32° செல்சியஸ் முதல் 30° செல்சியஸ் வரை நிலவும்.

குளிர்காலம்

குளிர் காலத்தின் போது மயுர்பஞ்சிற்கு சுற்றுலா வருவதே சிறப்பானது. குளிர் காலத்தின் போது வெயில், ஈரப்பதம் குளிர் மற்றும் மழை என அனைத்தையும் ஒரு கலவையாக நாம் காணலாம். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை சராசரியாக 28° செல்சியஸ் அளவில் நிலவும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தான் குளிர் அதிகமாக இருக்கும். இந்த மாதங்களில் வெப்பநிலை 15° செல்சியசாக பதிவாகும். அக்டோபர் மாத இறுதியில் தொடங்கும் குளிர் காலம் பிப்ரவரி தொடக்கத்தோடு நிறைவுபெறும்.