Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மீரட் » வானிலை

மீரட் வானிலை

மித வெப்ப பருவநிலை நிலவும் மீரட் நகரத்தில் கடுமையான கோடை மற்றும் குளிர்காலங்களும், மற்றும் இடையில் மழைக்காலமும் நிலவி வருகின்றன.

கோடைகாலம்

மீரட் நகரத்தில் கடுமையாக இருக்கும் கோடைக்காலம் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரையிலும் நீடிக்கும். இந்நாட்களில் அனல் காற்றுடன், 45°C வரையில் வெப்பநிலை இருக்கும்.

மழைக்காலம்

ஜீலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் நிலவும் மழைக் காலத்தில் மீரட் நகரம் அதிகளவிலான மழைப்பொழிவை அவ்வப்போது பெறுவது வழக்கம். இந்நாட்களில் பருவநிலை ஈரப்பதமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். ஆகஸ்டு மாதத்தில் மீரட் நகரம் அதிகமான மழைப்பொழிவைப் பெறுகிறது.

குளிர்காலம்

மீரட் நகரத்தின் குளிர்காலம் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலும் நீடிக்கும். இந்நாட்களில் வெப்பநிலை 12°C முதல் 25°C வரையிலும் இருப்பதால், அது மென்மையாகவும் மற்றும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும்.