Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மலே மகாதேஸ்வரா குன்று » வானிலை

மலே மகாதேஸ்வரா குன்று வானிலை

மலே மகாதேஸ்வரா குன்று கடல் மட்டத்திலிருந்து 3000 கிலோமீட்டர்  உயரத்தில் இருப்பதால் எப்போதும் மிதமான வானிலையே நிலவும். இதனால் சூரிய உதயத்தின் போது பனிமூட்டமாக இருப்பதுடன், காலை நேரத்தில் மகாதேஸ்வரா குன்றில் நிறைய பறவை இனங்களையும் பார்க்கலாம். மலே மகாதேஸ்வரா குன்றுக்கு சுற்றுலா வர வருடத்தின் எந்த காலமும் உகந்ததே என்றாலும் டிசம்பரிலிருந்து, பிப்ரவரி வரையிலான காலங்களில் மகாதேஸ்வரா குன்றுக்கு சுற்றுலா வருவது சிறப்பாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : மலே மகாதேஸ்வரா குன்றின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 35 டிகிரியும், குறைந்தபட்சமாக 20 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும். இந்தக் காலங்களில் நிலவும் குளிர்ச்சியும், இதமுமான வானிலை சுற்றுலா அனுபவத்தை சிறப்பானதாக்கும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : மலே மகாதேஸ்வரா குன்றின் மழைக் காலங்களில் மிதமான மழைப் பொழிவே காணப்படும். இந்தக் காலங்களில் நீர்வீழ்ச்சிகளின் அழகை பயணிகள் கண்குளிர கண்டு ரசிக்கலாம். அதே நேரத்தில், சில சமயங்களில் பெய்யும் கன மழை காரணமாக சாலைகள் ஆபத்தாகவும், அதன் காரணமாக வெளியில் சுற்ற முடியாத சூழலும் ஏற்படலாம்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : மலே மகாதேஸ்வரா குன்றின் பனிக் கால வெப்ப நிலை அதிகபட்சமாக 20 டிகிரியும், குறைந்தபட்சம் 12 டிகிரியுமாக இருக்கும். இந்தக் காலங்களில் மலே மகாதேஸ்வரா குன்றுக்கு வரும் பயணிகள் தீவிரமான குளிரை அனுபவிப்பார்கள். எனினும் பொருட்படுத்தத்தக்க அளவே குளிர் நிலவும் என்பதால், பயணிகள் குன்றின் அழகிய தோற்றத்தை இந்த காலங்களில் பரிபூரணமாக ரசிக்கலாம்.