Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மோத்திஹரி » வானிலை

மோத்திஹரி வானிலை

பருவக்காலத்திற்கு பிறகு மோத்திஹரிக்கு சுற்றுலா வருவதே சரியான நேரமாக இருக்கும். அதற்கு காரணம் அந்நேரம் நிலவும் மிதமான வெப்பநிலை. இந்நேரத்தில் சுற்றுலாத் தலங்களை சுலபமாக சுற்றிப் பார்க்கலாம். பருவக் காலத்திற்கு பிறகு இயற்கை அழகு இன்னமும் மெருகேறி காட்சி தரும்.

கோடைகாலம்

மோத்திஹரியில் கோடைக்காலம் அதிக வெப்பத்துடனும் ஈரப்பதத்துடனும் இருக்கும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். மார்ச் முதல் மே மாதம் வரை இங்கு கோடைக்காலமாக அறியப்படுகிறது.

மழைக்காலம்

மோத்திஹரியில் ஜூன் மாதம் தொடங்கும் மழைக்காலம் ஆகஸ்ட் வரை நீடிக்கும். இக்காலத்தில் பலமான மழை பெய்யக்கூடும். மேலும் தட்ப வெப்பநிலையும் நடுநிலையாக இருக்கும்.

குளிர்காலம்

மோத்திஹரியில் குளிர் காலத்தின் போது சராசரியாக தட்ப வெப்பநிலை 20 டிகிரி செல்சியசை தாண்டாமல் இருப்பதால் நல்ல குளிரான வானிலை நிலவும். சில நேரம் தட்ப வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் வரை கீழிறங்கும். டிசம்பர் மாதம் தொடங்கும் குளிர் காலம் பிப்ரவரி வரை நீடிக்கும்.