Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முங்கர் » வானிலை

முங்கர் வானிலை

இங்கு நிலவும் அதீத வானிலைகளை வைத்து பார்க்கும் போது, முங்கர் செல்வதற்கு ஏதுவான காலம் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான காலமேயாகும்.

கோடைகாலம்

முங்கரின் கோடைகாலங்கள் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் போது சுமார் 44 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடியதான வெப்பநிலையுடன் அதீத வெப்பமுடையவையாகக் காணப்படுகின்றன. கோடையின் பெரும்பாலான பகுதியில் இந்நகர் வறண்ட வானிலையுடனேயே காணப்படும்.

மழைக்காலம்

இந்நகரம், மழைக்காலத்தின் போது ஓரளவிற்கு நல்ல மழைப்பொழிவைப் பெறுவதினால் வெம்மையிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கக்கூடியதாக இருக்கும். மழைக்காலம் மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

குளிர்காலம்

குளிர்காலங்களின் போது முங்கரின் வெப்பநிலை சுமார் 6 டிகிரி செல்சியஸ் வரை இறங்கி, இந்த இடத்தை உறைய வைக்கக்கூடிய குளிருடன் திகழச் செய்து, நீண்ட நாட்கள் இங்கு தங்குவதை சற்றே கடினமாக்குகிறது. இக்காலத்தின் போது இங்கு செல்வதானால் கதகதப்பான கம்பளித் துணிகளை கையோடு எடுத்துச் செல்வது நலம்.