Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முசூரி » வானிலை

முசூரி வானிலை

மார்ச் முதல் ஜூன் மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலம் பயணிக்க சிறந்த பருவமாக கருதப்படுகிறது. சாகசப் பயணங்களை விரும்புவோர் கோடை காலத்தில் பயணித்தால் மலையேற்றம், கூடாரம் அமைத்தல் ஆகிய விளையாட்டுகளில் ஈடுபடலாம். தண்ணீர் சவாரிக்கு தகுந்த காலமாக மழைக்காலத்துக்கு பிந்தைய பருவமான செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மாதங்கள் கருதப்படுகிறது. 

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை): மார்ச் மாதம் துவங்கி ஜூன் வரை நீளும் கோடைகாலத்தில் மிதமான் குளிராக இருக்கும் வானிலை அதிகபட்சமாக 27டிகிரி வரை செல்கிறது.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை): ஜூன் துவங்கி செப்டம்பர் வரை நீளும் மழைக்காலங்களில் மிதமான அளவிலேயே மழை பெய்கிறது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் ஃபிப்ரவரி வரை): டிசம்பர் துவங்கி ஃபிப்ரவரி வரை நீளும் குளிர்காலத்தில் வானிலை பூஜ்யம் டிகிரிக்கும் குறைவாக கூட நிலவுகிறது. கடுமையான பனிப்பொழிவால் சாலைகள் மூடப்படும் வாய்ப்புகளும் அதிகம். இப்பருவத்தில் பயணம் செய்ய விரும்ப்கிறவர்கள் தடிமனான கம்பளி ஆடைகளை எடுத்துச் செல்ல பரிந்துரைக்கப்படுகிறார்கள்.