Search
  • Follow NativePlanet
Share

நாகர்ஹொளே - விலங்குகளின் உறைவிடம்

22

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள நாகர்ஹொளே நகரம், அதன் பெயரிலேயே உள்ள நாகர்ஹொளே தேசியப் பூங்காவுக்காக உலகப் பிரசித்தி பெற்றது. அதன் அடர்ந்த காடுகளில் வளைந்தும், நெளிந்தும் ஓடிக்கொண்டிருக்கும் நாகர்ஹொளே நதியின் காரணமாகவே அதற்கு நாகர்ஹொளே என்று பெயர் வந்தது. கன்னடத்தில் 'நாகர்' என்றால் பாம்பு என்றும், 'ஹொளே' என்றால் நதி என்றும் அர்த்தம்.

நாகர்ஹொளே நகரப் பகுதியின் முக்கிய அங்கமாக விளங்கி வருகிறது ராஜீவ் காந்தி தேசியப் பூங்கா. இந்த நகரின் அற்புதமான வெப்ப நிலைக்காகவும், செழுமையான அடர்ந்த காடுகளுக்காகவும் ஆண்டு தோறும் இங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

நாகர்ஹொளே காடுகள் ஆதி காலத்திலிருந்தே வனவிலங்குகளுக்காக பிரபலமாக இருந்து வருகின்றன. அந்த காலங்களில் மைசூர் மகாராஜாக்கள் இங்கு காட்டெருமைகள் உள்ளிட்ட மிருகங்களை வேட்டை ஆடி வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் இன்றும் எண்ணற்ற விலங்கு இனங்களை நீங்கள் நாகர்ஹொளே காடுகளில் பார்த்து ரசிக்கலாம்.

நாகர்ஹொளே வரும் பயணிகள் பிரம்மகிரி மலைகளுக்கும், இறுப்பு நீர்வீழ்ச்சிக்கும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும். இதில் இறுப்பு நீர்வீழ்ச்சி இங்கே ஓடிக்கொண்டிருக்கும் லக்ஷ்மண தீர்த்த நதியிலிருந்து பிறக்கிறது.

இந்த லக்ஷ்மண தீர்த்த நதி இராமாயண காலத்திலிருந்தே இருப்பதாக ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. ஒரு முறை சீதா பிராட்டியார் தாகத்தால் தவித்த போது, லக்ஷ்மணன் வில்லில் நாணைப் பூட்டி தரையை நோக்கி அம்பு எய்ததாகவும், அதிலிருந்து பொங்கிப் பெருகி வந்ததே இன்று லக்ஷ்மண தீர்த்த நதியாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.

நாகர்ஹொளே சிறப்பு

நாகர்ஹொளே வானிலை

சிறந்த காலநிலை நாகர்ஹொளே

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது நாகர்ஹொளே

  • சாலை வழியாக
    பெங்களூர், மைசூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து நாகர்ஹொளேவுக்கு அரசுப் மற்றும் தனியார் சொகுசுப் பேருந்துகள் நிறைய எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    நாகர்ஹொளேவிலிருந்து மைசூர் ரயில் நிலையம் 96 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த ரயில் நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இங்கு வந்த பின்னர் வாடகை கார்களிலேயோ, பேருந்துகளிலேயோ சுலபமாக நாகர்ஹொளேவை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    நாகர்ஹொளேவிலிருந்து மைசூர் விமான நிலையம் 96 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இதனால் கோவா,மும்பை, சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களிலிருந்து வரும் பயணிகள் சுலபமாக நாகர்ஹோலை வந்தடையலாம். அதே போல் நாகர்ஹொளேவிலிருந்து , பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம் 236 கிலோமீட்டரில் இருப்பதால் வெளிநாட்டு பயணிகளும் எந்த சிரமமுமின்றி நாகர்ஹொளே வந்து சேரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun