Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாகர்ஹொளே » வானிலை

நாகர்ஹொளே வானிலை

நாகர்ஹொளேவுக்கு சுற்றுலா வருவதற்கு வருடத்தின் எந்த காலமும் உகந்ததே.  இருப்பினும் மழைக் காலங்களுக்கு பிறகு நாகர்ஹொளேவின் அடர்ந்த காடுகள் எங்கும் பச்சை பட்டுடுத்தியது போல் மிகவும் அழகாக காட்சியளிப்பதால் பயணிகள் அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் நாகர்ஹொளே வந்தால் சிறப்பாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஏப்ரல் வரை) : நாகர்ஹொளே நகரின் கோடை காலங்களில் ஏறக்குறைய 33 டிகிரி அளவில் வெப்ப நிலை நிலவும். இந்த காலங்களில் விலங்குகளை பார்க்கும் ஆர்வமுள்ள பயணிகளின் கூட்டமே நாகர்ஹொளேவில் அதிமாக காணப்படும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : நாகர்ஹொளேவின் மழைக் காலங்கள் மிதமான மழைப்போழிவையே பெறும். எனினும் வெளியில் சுற்ற முடியாத சூழல் நிலவுவதால் நாகர்ஹொளேவுக்கு பயணிகள் மழைக் காலங்களில் வருவதை தவிர்ப்பது நல்லது.  

குளிர்காலம்

(நவம்பர் முதல் ஜனவரி வரை) : நாகர்ஹொளேவின் பனிக் காலங்கள், குறைந்தபட்ச வெப்பநிலையாக 14 டிகிரியோடு மிகவும் இதமானதாகவும், இனிமையானதாகவும் இருக்கும்.