லேண்ட்ஸ் என்ட் எனும் இந்த அற்புதமான சுற்றுலாத்தலம் நைனித்தால் நகரிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 2118மீ உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த சிகரத்திலிருந்து கண்ணைக்கவரும் மலைக்காட்சிகள், பள்ளத்தாக்கு சரிவுகள் மற்றும் குர்பதால் ஏரி போன்ற ஏராளமான இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்க முடியும்.
இந்த சிகரத்தை அடைவதற்கு பயணிகள் சிரமமில்லாமல் பரா பத்தர் எனும் இடம் வரை வாகனத்தில் சென்று அதன் பின் 1 கி.மீ தூரம் மலையேற்றம் செய்தால் போதுமானது. இந்த தூரத்தை குதிரைச்சவாரி மூலமும் கடக்கலாம்.



Click it and Unblock the Notifications