மார்ச் முதல் ஜூன் வரையிலான மாதங்களும், செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களும் நால்தேஹ்ரா சுற்றுலாத்தலத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள உகந்தவையாக உள்ளன.
(ஏப்ரல் முதல் ஜூன் வரை) : நால்தேஹ்ரா சுற்றுலாத்தலத்தில் ஏப்ரல் தொடங்கி ஜூன் இறுதி வரை கோடைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 28°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 28°C வெப்பநிலையும் நிலவுகிறது. இனிமையான சூழல் நிலவுவதால் கோடைக்காலத்தில் இங்கு விஜயம் செய்வதை பயணிகள் விரும்புகின்றனர்.
( ஜூலை முதல் செப்டம்பர் வரை) : நால்தேஹ்ரா சுற்றுலாத்தலத்தில் ஜூலை துவங்கி செப்டம்பர் மாதம் வரையில் நிலவும் மழைக்காலத்தில் மிகக்குறைவான மழைப்பொழிவே காணப்படுகிறது.
( நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : நால்தேஹ்ரா சுற்றுலாத்தலத்தில் நவம்பர் மாதம் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இந்த பருவத்தில் கடுமையான குளிர் இப்பிரதேசத்தில் நிலவுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக -4°C வரை சரிகிறது. குளிர்காலத்தின் உச்சத்தில் அதிகமான பனிப்பொழிவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.