Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நம்ச்சி » வானிலை

நம்ச்சி வானிலை

நம்ச்சியானது ஒரு மிதவெப்பமண்டலப் பிரதேசம் ஆகும். இதமான கோடையும், குளிர்ச்சி மிக்க குளிர்காலமும் இங்கு நிலவுகின்றன. மழைக்காலத்தில், மிக அதிகமான மழைப்பொழிவு இருக்கும். நம்ச்சியைச் சுற்றிப்பார்க்க கோடைக் காலமே மிகவும் உகந்ததாக உள்ளது.

கோடைகாலம்

மார்ச் முதல் ஜூன் வரை இங்கு கோடைகாலம் நிலவுகிறது. இப்பருவத்தில் வெப்பநிலையானது 10°C முதல் 28°C வரை இருக்கும். இனிமையான காலநிலையின் காரணமாக, இப்பருவமே நம்ச்சியைச் சுற்றிப்பார்க்க மிகவும் உகந்தது.

மழைக்காலம்

ஜூலை, ஆகஸ்டு மற்றூம் செப்டம்பர் மாதங்களில் இங்கு பலத்த மழை பதிவாகிறது. மழைப்பொழிவுடன், வெப்பநிலையும் கணிசமாகக் குறைந்து,  சுற்றுலா மேற்கொள்ளத் தகுதியற்ற பருவமாக உள்ளது.

குளிர்காலம்

அக்டோபரில் தொடங்கி, பிப்ரவரி மாதம் வரை குளிர்காலம் நீடிக்கிறது. குளிர்காலத்தில் வெப்பநிலையானது 16°C முதல்  -5°C வரை குறைந்து காணப்படுகிறது. இப்பருவத்தில் கூட நம்ச்சி பகுதிகளில் சுற்றுலா மேற்கொள்ளலாம். ஆனால், உங்கள் உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள தேவையான உல்லன் மற்றும் கம்பளி ஆடைகளை எடுத்துக்கொள்ள மறவாதீர்கள்.