Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நம்டஃபா தேசியப் பூங்கா » வானிலை

நம்டஃபா தேசியப் பூங்கா வானிலை

நம்டஃபா தேசியப் பூங்காவிற்கு சுற்றுலா வருவதற்கு அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களே சிறந்தவையாகும். இந்த பூங்கா 200 மீட்டர் முதல் 4500 மீட்டர் உயரத்தில் உள்ளதால் இந்த பூங்காவிற்குள்ளேயே பல வானிலை நிலவும். உயரமான இடத்தில் வருடம் முழுவதும் பனி படர்ந்து காணப்படும். உயரம் கூட கூட விலங்கின வகைகள் கூட மாறுபடும்.

கோடைகாலம்

வனவிலங்கு விரும்பிகள் நம்டஃபா தேசியப் பூங்காவிற்கு மார்ச் முதல் மே மாதம் வரை வரலாம். மழைக்காலத்திற்கு முந்தைய காலமான இப்பருவத்தில் எந்த ஒரு தடையும் இன்றி இந்த இடத்தை சுற்றிப்பார்க்கலாம்.

மழைக்காலம்

உயரமான இடங்களை போல் இல்லாமல், தட்டையான இடங்களிலும் பள்ளத்தாக்கு உள்ள இடங்களிலும் வெப்ப சீதோஷ்ண நிலை நிலவும். ஜூன் முதல் செப்டம்பர் வரை இங்கு தென் மேற்கு பருவ மழை நீடிக்கும். அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை பருவக்காலம் முடிந்த நிலையாகும். மழையும் ஈரப்பதும் இந்த வட்டாரத்தின் தாவர வளர்ச்சியை பாதிக்கும்.

குளிர்காலம்

டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை இங்கு குளிர் காலம் நீடிக்கும். இந்நேரத்தில் உயரமான இடத்தில் பனி படர்ந்து இருப்பதால் அதிக அளவு குளிர் நிலவும்.