நாந்தேட் நகரின் கோடை காலங்களில் வறண்ட வானிலையே நிலவும். இந்தப் பருவங்களில் சில சமயம் பகல் நேர வெப்பநிலை 35 டிகிரியை தாண்டும். ஆனால் இரவு நேர வெப்பநிலை பகலை விட சற்று குறைந்தே காணப்படும்.
நாந்தேட் நகரின் மழைக் காலங்களில் மிதமான அளவிலேயே மழைப் பொழிவு இருக்கும். இந்தப் பருவங்களில் அதிகபட்சமாக 25 டிகிரி வரை வெப்பநிலை நிலவும்.
நாந்தேட் நகரை பனிக் காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அற்புதமானது. இந்தப் பருவங்களில் பகல் நேர வெப்பநிலை சில சமயம் 9 டிகிரிக்கும் கீழே சென்றுவிடுவதால், பயணிகள் குளிர்ச்சியின் மலர் ஸ்பரிசத்தை உணரலாம்.