Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாசிக் » வானிலை

நாசிக் வானிலை

மழைக்காலம் மற்றும் குளிர்காலம் இரண்டுமே நாசிக் நகருக்கு சுற்றுலா செல்ல உகந்தது.

கோடைகாலம்

மார்ச்சிலிருந்து மே மாதம் வரையில் நாசிக் பகுதியில் கோடைக்காலம் நிலவுகிறது. அப்போது வெப்பநிலை பொசுக்கும் 420 c டிகிரி அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலாப்பயணிகள் கோடையில் நாசிக் செல்வது உகந்ததல்ல என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். கோடையின் கடும் வெப்பம் தாங்க முடியாததாய் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் காணப்படும்.

மழைக்காலம்

ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நாசிக் பகுதியில் மழைக்காலம் காணப்படுகிறது. சிறு தூறல் தொடங்கி மிதமான மழை வரை இந்த பருவத்தில் பொழிந்து வெப்பத்தை குறைப்பதால் இந்த பருவமும் நாசிக் நகரை சுற்றிப்பார்க்க சிறந்ததாக கருதப்படுகிறது.

குளிர்காலம்

டிசம்பரிலிருந்து பிப்ரவரி வரை நாசிக்கில் குளிர்காலமாகும். இந்த காலகட்டத்தில் வெப்பநிலை பெரிதும் குறைந்து குளுமையாக காணப்படுகிறது. அதிகபட்சம் 320 c குறைந்த பட்சம் 80 c என்ற அளவில் இருக்கும் இந்த குளிர்காலமே நாசிக் நகரை சுற்றிப்பார்த்து மகிழ ஏற்றது என்று பரிந்துரைக்கப்படுகிறது.