வருடம் முழுவதும் சுற்றுள்ள செல்ல உகுந்த இடமாக திகழ்கிறது நௌகுசியாடல். இருப்பினும் ஊர் சுற்றிப் பார்க்கவும் இயற்கை சூழலில் நடை போடவும் கோடைக்காலம் மற்றும் பருவக்காலம் முடிவில் இங்கு வருவதே சிறந்தது.
(மார்ச் முதல் ஜூன் வரை): நௌகுசியாடலில் கோடைக்காலம் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் வரை நீடிக்கும். இந்நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 28 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 15 டிகிரி செல்சியசாகவும் பதிவாகும்.
(ஜூலை முதல் செப்டம்பர் வரை): நௌகுசியாடலில் மழைக்காலம் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும்.
(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை): நௌகுசியாடலில் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கும் குளிர் காலம் பிப்ரவரி வரை நீடிக்கும். இந்நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 15 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 3 டிகிரி செல்சியசாகவும் பதிவாகும். இருப்பினும் பனிக்காற்று மிகவும் பலமாக வீசுவதால் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசிற்கு கீழே செல்லவும் வாய்ப்புள்ளது.