Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நீமுச் » வானிலை

நீமுச் வானிலை

வருடத்தில் எந்த மாதத்திலும் நீமுச்சைச் சுற்றிப் பார்க்கலாம். இருப்பினும், அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை வானிலை மிகவும் அருமையாக இருக்கும். இந்த சமயத்தில், நீமுச்சில் தங்கி இயற்கை எழிலை ரசிப்பது புதுவித அனுபவத்தை கொடுக்கும்.

கோடைகாலம்

நீமுச் மிகவும் இதமான வானிலை கொண்ட இடம். கோடை காலத்தில் கூட அதிகபட்சமாக 32 டிகிரி வெப்பம் மட்டுமே இருக்கும். வருடம் முழுவதும் அருமையான வெப்பநிலையை கொண்டது நீமுச்.

மழைக்காலம்

நீமுச் நகரில் போதுமான அளவு மழை பொழிந்தாலும், சுற்றுலாப் பயணிகள் மகிழும் வகையில் இதமான சீதோஷன நிலை இருக்கும். சராசரியாக 1343.6 மிமீ மழை இங்கு பதிவாகிறது. மழைக்காலத்தில் நீமுச்சின் அழகை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் பலர் வருகின்றனர்.

குளிர்காலம்

நீமுச்சில் நவம்பர் மாதம் குளிர் காலம் தொடங்குகிறது.  கோடைகாலத்தில் அளவான வெப்பத்தைப் போலவே, குளிர்காலத்தில் குளிரும் மிகவும் அதிகமாக இல்லாமல், அதிகபட்சமாக 19.42 டிகிரி அளவுக்கு இதமாக இருக்கும். மாலை நேரங்களில் சற்று குளிர் அதிகமாக இருக்கும். கோடைகாலத்தைப் போன்றே குளிர்காலமும் சுற்றுலாப் பயணிகள் நீமுச்சை ரசிக்க ஏற்ற காலமாகும்.