Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நெல்லூர் » வானிலை

நெல்லூர் வானிலை

நெல்லூர் நகரத்துக்கு பயணம் மேற்கொள்ள குளிர்காலமே ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் மிதமான, குளுமையான சூழல் நிலவுகிறது. எனவே அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் நெல்லூர் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக விளங்குகின்றன.

கோடைகாலம்

நெல்லூர் பகுதி கோடைக்காலத்தில் மிகக்கடுமையான, தாங்கிக்கொள்ளமுடியாத வெப்பத்துடன் காட்சியளிக்கிறது. இக்காலத்தில் வெப்பநிலை 40° C வரையிலும் உயர்ந்து காணப்படும். எனவே கோடைக்காலத்தை சுற்றுலாப்பயணிகள் தவிர்த்து விடுவது நல்லது. அதுமட்டுமல்லாமல் நெல்லூர் பகுதியைச்சுற்றிலுமிருந்த வனப்பகுதி அழிக்கப்பட்டுவிட்டதால் இங்கு அதிமான ஈரப்பதமும் காணப்படுகிறது. பொதுவாக கோடையில் இங்கு 26° C முதல் 38° C வரை சராசரி வெப்பநிலை நிலவுகிறது. குறிப்பாக மே மாதத்தில் இங்கு உஷ்ணம் மிக அதிகமாகவும் இருக்கும். மார்ச் மாதத்தில் துவங்கி மே மாத இறுதி வரை நெல்லூர் பகுதியில் கோடைக்காலம் நிலவுகிறது.

மழைக்காலம்

ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நெல்லூர் நகரத்தில் வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது. இம்மாதங்கள் மழைக்கால மாதங்கள் ஆகும். இக்காலத்தில் சராசரி வெப்பநிலை 26° C முதல் 35° C வரை நிலவுகிறது.

குளிர்காலம்

நெல்லூர் பகுதி குளிர்காலத்தில் இதமான இனிமையான சூழலுடன் காட்சியளிக்கிறது. இக்காலத்தில் வெப்பநிலை 15° C வரை குறைந்து காணப்படும். சராசரியாக இங்கு குளிர்காலத்தின் வெப்பநிலை 15° C முதல் 30° C வரை என்ற அளவில் காணப்படுகிறது. அக்டோபர் மாதம் துவங்கும் குளிர்காலமானது பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது.