நெர்சா கிராமத்திற்கு வருகை தரும் பயணிகள் பீம்காட் என்று அழைக்கப்படும் கோட்டைக்கு விஜயம் செய்வது அவசியம். இயற்கைப்பாறையால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கோட்டை அடர்ந்த கானகத்தின் நடுவில் உள்ளது.
வரலாற்று தகவல்களின்படி இந்த் பீம்காட் கோட்டை மராத்தா மன்னரான சிவாஜியால் பயன்படுத்தப்பட்ட வெளிப்புற கோட்டையாக கருதப்படுகிறது.
மேலும், புராணக்கதைகளின்படி பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமா, இந்த கோட்டை ஸ்தலத்துக்கு விஜயம் செய்ததாகவும் அதனாலேயே இது பீம்காட் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த கோட்டை அமைந்துள்ள வனப்பகுதியானது இயற்கையை அதன் நிஜமான புனிதத்தோடு தரிசிக்க விரும்பும் இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும்.



Click it and Unblock the Notifications