அக்டோபரிலிருந்து, மார்ச் மாதத்துக்கு இடைப்பட்ட காலம் நெர்சா கிராமப்பகுதிக்கு விஜயம் செய்ய உகந்த காலமாக கருதப்படுகிறது.
(மார்ச் முதல் மே வரை): கோடைக்காலத்தில் நெர்சா கிராமப்பகுதி மிகக்கடுமையான அசௌகரியமான வெப்பநிலையை கொண்டுள்ளது. வெப்ப நிலை அதிகபட்சமாக பகலில் 400C வரை காணப்படுகிறது. மலையேற்றம் மற்றும் காட்டுவிலங்கு தரிசனம் போன்றவற்றுக்கு வசதியாக பயணிகள் இங்கு கோடைக்காலத்தில் விஜயம் செய்வதை விரும்புகின்றனர்.
(ஜுன் முதல் செப்டம்பர் வரை) : மழைக்காலத்தில் நெர்சா கிராமப்பகுதி மிதமான மழைப்பொழிவை தென்மேற்குப்பருவ மழையின் மூலம் பெறுகின்றது. இக்காலத்தில் மலையேற்றத்தில் ஈடுபடுவதும் வெளியே ஊர் சுற்றிப்பார்ப்பதும் மிக சிரமம் என்பதால் மழைக்காலத்தில் நெர்சா கிராமப்பகுதிக்கு விஜயம் செய்வதை பயணிகள் தவிர்க்கின்றனர்.
(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : குளிர்காலத்தின்போது நெர்சா கிராமப்பகுதியின் பருவநிலை மிகக் குளுமையாகவும் இனிமையாகவும் காணப்படுகிறது. எனவே குளிர்காலத்தில் நெர்சா கிராமத்திற்கு பயணிகள் வருகை தர விரும்புகின்றனர்.