Search
  • Follow NativePlanet
Share
» » கயாக்கிங் செய்வது உங்களுக்கு பிடிக்குமா – கவலை வேண்டாம்? சென்னைக்கு உள்ளேயே நீங்கள் அதை அனுபவிக்கலாம்!

கயாக்கிங் செய்வது உங்களுக்கு பிடிக்குமா – கவலை வேண்டாம்? சென்னைக்கு உள்ளேயே நீங்கள் அதை அனுபவிக்கலாம்!

கோவில்கள், கடற்கரைகள், வரலாற்றுச் சின்னங்கள், பிரமாண்டமான மால்கள் எல்லாம் போரடித்து விட்டதா? பரபரப்பான இந்த வாரத்தில் இருந்து சற்று ஓய்வெடுத்து உயிருக்கு புத்துணர்ச்சி அளிக்க விரும்புகிறீர்களா? இதோ ஒரு சரியான யோசனை! சென்னையில் கயாக்கிங்கிற்கு சென்று வாருங்கள்.

துடுப்பை எடுத்துக்கொண்டுகயாக்கிங் படகில் சற்று தூரம் சென்று வந்து பாருங்கள். அதில் கிடைக்கும் அமைதியும், சந்தோஷமும் 'அடடே நன்றாக இருக்கிறதே, அடுத்த வாரமும் செல்லலாமோ' என்று நினைப்பீர்கள்.

அது ஏரியாக இருந்தாலும் சரி, நதியாக இருந்தாலும் சரி, கடலாக இருந்தாலும் சரி, இயற்கையின் அதிசயங்களுக்கு மத்தியில் நாம் ஒரு சிறு படகில் நாமாகவே நீந்திக் கொண்டு போவது என்பது நம்மை மீறியும் நமக்கு ஒரு நம்பிக்கை தருகிறது.

சென்னையில் கயாக்கிங்

சென்னையில் கயாக்கிங்

சாகசம் என்று பேசும்போது, நம் நாட்டில் பல சாகச விளையாட்டுகள் குடியேறி உள்ளன என்பதை நாம் அறிவோம். அது போல, கயாக்கிங் என்பது நம் நாட்டில் படிப்படியாக முக்கியத்துவம் பெற்று வரும் சாகச விளையாட்டாகும். இது சென்னையிலும் தன் கால்தடத்தை பதித்து வெகு நாட்களாகி விட்டது.
சென்னையில் முட்டுக்காடு, முதலியார்குப்பம் போட் ஹவுஸ், மாம்பாக்கம் ஏரி, கிண்டி நேஷனல் பார்க் ஆகிய இடங்களில் கயாக்கிங் செய்யப்படுகிறது. இருப்பினும் முட்டுக்காட்டில் இயங்கி வரும் கயாக்கிங் ஸ்பாட்டே மக்களிடம் மிகவும் பிரபலம்

கோவளம் – முட்டுக்காடு கயாக்கிங்

கோவளம் – முட்டுக்காடு கயாக்கிங்

கயாக்ஸ் எனப்படும் தனித்துவமான படகுகளைப் பயன்படுத்தி, அழகிய கடற்கரையை நோக்கி படகை செலுத்தி, அலைகளுக்கு நடுவே ஆடி மகிழ முட்டுக்காட்டில் உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கிறது.
இதை இணையதளம் வாயிலாகவும் அல்லது நேரில் சென்றோ நீங்கள் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பிறகு உங்களுக்கு ஒரு கயாக், லைப் ஜாக்கெட் மற்றும் துடுப்பு கொடுக்கப்படுகிறது.
நீங்கள் கயாக்கில் ஈடுபடுவதற்கு முன்னரே திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்களால் உங்களுக்கு ஒரு செயல்முறை வகுப்பு எடுக்கப்படும்.பின்னர் நீங்கள் கயாக்கில், அலைகளுக்கு நடுவே ஆனந்தமாக துடுப்பை போட்டுக் கொண்டு கயாக் செய்யலாம்.

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

சென்னையிலிருந்து 39 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஈசிஆர் சாலையில் உள்ள கோவளத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நீங்கள் பொது பேருந்து வாயிலாகவோ அல்லது தனியார் போக்குவரத்து மூலமாகவோ அல்லது சொந்த வாகனத்திலோ எளிதாக அணுகலாம்.
7 வயதிற்கும் குறைவான குழந்தைகளும், ஏற்கனவே உடல் உபாதைகள் கொண்டவர்களும் கயாக்கிங் செய்ய அனுமதி இல்லை.
இந்த இடம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கிறது. மேலும் ஒரு முறை ஒரு நபர் கயாக் செய்ய 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை ஆகிறது.

FAQ's
  • எப்படி செல்வது?

    சென்னையிலிருந்து 39 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஈசிஆர் சாலையில் உள்ள கோவளத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
    நீங்கள் பொது பேருந்து வாயிலாகவோ அல்லது தனியார் போக்குவரத்து மூலமாகவோ அல்லது சொந்த வாகனத்திலோ எளிதாக அணுகலாம்.
    7 வயதிற்கும் குறைவான குழந்தைகளும், ஏற்கனவே உடல் உபாதைகள் கொண்டவர்களும் கயாக்கிங் செய்ய அனுமதி இல்லை.
    இந்த இடம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கிறது. மேலும் ஒரு முறை ஒரு நபர் கயாக் செய்ய 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை ஆகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X