Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் உள்ள தேசிய நினைவுச்சின்னங்களை இலவசமாக பார்வையிடலாம் – விவரங்கள் இதோ!

இந்தியாவில் உள்ள தேசிய நினைவுச்சின்னங்களை இலவசமாக பார்வையிடலாம் – விவரங்கள் இதோ!

இந்தியா வளமான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலைக்கு பெயர் போன ஒரு நாடு என்பது உலகறிந்த விஷயமே. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதோ ஒரு சிறப்பம்சம் இருக்கத்தான் செய்கிறது. இந்திய நாடு பல கோட்டைகள், அரண்மனைகள், தொல்பொருள் இடிபாடுகள், கோவில்கள் மற்றும் தேவாலயங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தியாவில் உள்ள தேசிய நினைவுச்சின்னங்களை இலவசமாக பார்வையிட இப்போது உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

indian-monuments-1659694022-1659783592.jpg

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்

'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' பிரச்சாரம் மற்றும் நாட்டின் 75வது சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 5 முதல் 15 ஆம் தேதி வரை

இந்திய தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்படும் அனைத்து நினைவுச்சின்னங்களுக்கும் நுழைவு இலவசம். இந்த தகவலை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்றால் என்ன?

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்பது இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடுவதற்கும், அதன் மகத்துவத்தை நினைவுகூருவதற்கும் இந்திய அரசாங்கத்தின் எடுக்கப்படும் முன்முயற்சியாகும்.இது இந்திய மக்களின் வரலாறு, அவர்களின் துடிப்பான கலாச்சாரம் மற்றும் தங்களுக்கும் நாட்டிற்கும் கொண்டு வந்த பல சாதனைகளை கொண்டாடுவதாகும்.

azadi-moments-2-1659955261.jpg

வரலாற்றைப் போற்றும் இந்திய தேசிய நினைவுச்சின்னங்கள்

இந்தியாவில் உள்ள நினைவுச்சின்னங்கள் பல்வேறு புவியியல் அமைப்புகளில் காணப்படுகின்றன. வரலாற்றுக்கு முந்திய காலனித்துவ காலங்கள் உட்பட பல்வேறு வரலாற்று காலங்களைச் சேர்ந்தவை. இவற்றில் பழங்கால மேடுகளும், பழங்கால குடியேற்றத்தின் சான்றுகளையும், கோவில்கள், மசூதிகள், கல்லறைகள், தேவாலயங்கள், கல்லறைகள், கோட்டைகள், அரண்மனைகள், படி கிணறுகள், பாறை வெட்டப்பட்ட குகைகள் மற்றும் மதச்சார்பற்ற கட்டிடக்கலை ஆகியவற்றைக் காட்டும் புராதன மேடுகளும் அடங்கும்.

இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் மொத்தம் 3,693 நினைவுச் சின்னங்கள் உள்ளன. இவற்றில், 116 நினைவுச்சின்னங்கள் மற்றும் 32 அருங்காட்சியகங்களை நீங்கல் டிக்கெட் செலுத்தி தான் பார்க்க முடியும். தாஜ்மஹால், ஹுமாயூன் கல்லறை, சப்தர்ஜங் கல்லறை, துக்ளகாபாத் கோட்டை, புராண கிலா, செங்கோட்டை, ஜந்தர் மந்தர், கொனார்க் சூரியன் கோயில், கோல்கொண்டா கோட்டை, அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள், சார்மினார், ஷானிவார் வாடா உள்ளிட்ட பல நினைவுச்சின்னங்கள் அடங்கும்.

indian-monuments-tweet-1659693917-1659955272.jpg

சுதந்திர தினக் கொண்டாட்டம்

'ஆசாதி கா அம்ரித் மஹோஸ்தவ்' பிரச்சாரத்தின் கீழ் இந்தியாவின் 75 வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வகையில்
மத்திய கலாச்சார அமைச்சகம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 5 மற்றும் 15 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். இது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமிருந்து வரும் பார்வையாளர்களுக்கும் பொருந்தும்.

தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவில் தூய்மை பிரச்சாரம் மற்றும் கண்காட்சிகள் உட்பட பல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. "ASI இன் ஆக்ரா வட்டம் ஆகஸ்ட் 8 முதல் 15 வரை 40 நினைவுச்சின்னங்களில் 'ஸ்வச்சதா' பிரச்சாரத்தை மேற்கொள்ளும். ஆக்ரா கோட்டை, சிக்கந்த்ராவில் உள்ள அக்பரின் கல்லறை, ஃபதேபூர் சிக்ரி மற்றும் இத்மத்-உத்-தௌலா ஆகியவை ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 15 வரை ஒளிரும்" என ASI இன் ஆக்ரா வட்டத்தின் கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ராஜ்குமார் படேல் கூறினார்.

"ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால் மற்றும் சிக்கந்த்ராவில் உள்ள குரு கா தால் ஆகியவற்றிலும் ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்யப்படும். தவிர, ஆக்ரா கோட்டை மற்றும் ஃபதேபூர் சிக்ரியில் தலா 50 அடி உயரமுள்ள இரண்டு மூவர்ணங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் நிறுவப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.

ஆகவே நீங்கள் இந்த தேதிகளுக்குள் இந்திய தேசிய நினைவுச்சின்னங்களுக்கு இலவசமாக சென்று வந்து விடலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X