Search
  • Follow NativePlanet
Share
» »இனி சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு வெறும் 2 மணி நேரத்தில் சென்றிடலாம் – வரவிருக்கிறது புதிய எக்ஸ்ப்ரஸ் ஹைவே!

இனி சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு வெறும் 2 மணி நேரத்தில் சென்றிடலாம் – வரவிருக்கிறது புதிய எக்ஸ்ப்ரஸ் ஹைவே!

சென்னையிலிருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கும் ஒரு மாபெரும் கூட்டம் தினமும் பயணம் செய்து கொண்டிருக்கிறது. சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையிலான சராசரி பயண நேரம் ஐந்து முதல் ஆறு மணி நேரம் ஆகும்.

மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை பற்றி குறிப்பிட்டு, எக்ஸ்பிரஸ்வே பயணத்திற்கு தயாரானவுடன் இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 2 மணிநேரமாக குறைக்கப்படும் என்று கூறினார்.

chennaibengalurunewexpresshighway1-1660796589.jpg

புதிய நான்கு வழி பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை, அரசாங்கத்தின் 26 புதிய பசுமை விரைவுச் சாலைகள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த புதிய பசுமை விரைவுச் சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி 2022 மே மாதம் அடிக்கல் நாட்டினார். இந்த விரைவுச் சாலை 2025 டிசம்பரில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு தயாராகிவிடும்.

மாபெரும் பொருட்செலவில் தயாராகும் புதிய பசுமை விரைவுச் சாலை

சென்னை-பெங்களூருவை இணைக்கும் புதிய பசுமை விரைவுச்சாலையில் 4-வழி இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட சாலை இருக்கும். 262 கிமீ நீளம் கொண்ட இந்த விரைவுச்சாலை ரூ.14,870 கோடி செலவில் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த திட்டத்தை 3 கட்டங்களாக பிரித்துள்ளது. சென்னை-பெங்களூரு விரைவுச் சாலை பெங்களூரு புறநகரில் உள்ள ஹோஸ்கோட்டிலிருந்து தொடங்கி தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் வரை விரிவடையும்.

இது ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக அதாவது மாலூர், கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ், ராணிப்பேட்டை, சித்தூர் பங்கார்பேட்டை மற்றும் பாலம்னேர் வழியாகச் செல்லும்.

chennaibengalurunewexpresshighway2-1660796598.jpg

பாதியாக குறைகின்ற பயண நேரம்

புதிய பசுமை விரைவுச்சாலை செயல்படத் தொடங்கியதும், அது சென்னையிலிருந்து பெங்களூரு செல்வதற்கான 5 முதல் 6 மணி நேர பயண நேரத்தை வெறும் 2 மணிநேரமாகக் குறைக்கும். மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் நவீன போக்குவரத்து சாதனங்களுடன் சாலை நிறுவப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

அறிக்கையின்படி, தென்னிந்தியாவில் ஆறு தனியார் நிறுவனங்கள் இந்த விரைவுச் சாலையின் கட்டுமானத்தைக் கையாளுகின்றன. மேலும் சிறப்பான அம்சம் என்னவென்றால், விரைவுச் சாலையானது பயண நேரத்தை மட்டும் குறைக்கப் போவதில்லை, பல வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.

இந்த புதிய பசுமை விரைவுச் சாலையின் கட்டுமானம் சுமார் 3,000 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றும் கிட்டத்தட்ட 90,000 பேருக்கு தற்காலிக வேலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பசுமை விரைவுச் சாலை செயல்பாட்டுக்கு வந்தவுடன், பெங்களூரு-சென்னை இடையே பயணம் செய்ய விரும்புவோருக்கு இது ஒரு நிம்மதி பெருமூச்சை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது அதிக நேரத்தை மிச்சப்படுத்துவதோடு பரந்த பாதைகள் கொண்ட சாலையில் பயணம் செய்வது மிகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X