Search
  • Follow NativePlanet
Share
» »சென்னைக்கு புதிதாக வரவிருக்கும் விமான நிலையம் – எங்கே? எப்போது, விவரங்கள் இதோ!

சென்னைக்கு புதிதாக வரவிருக்கும் விமான நிலையம் – எங்கே? எப்போது, விவரங்கள் இதோ!

தமிழக தலைநகரான சென்னையில் ஏற்கனவே மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் செயல்பாட்டில் உள்ளது. தினந்தோறும் 40000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு வந்து செல்வதால், நகர்ப்புறங்களில் கடும் போக்குவரத்து வசதிகள் ஏற்படுகின்றன. மேலும், இந்த விமான நிலையத்தில் ஒன்றரை கோடி மக்கள் கூட்டத்தை மட்டுமே சமாளிக்க முடியும். கடந்த ஆண்டு இந்த விமான நிலையத்திற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை இரண்டரை கோடி ஆகும்.

கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாலும், சென்னையை மேலும் மேம்படுத்தப்பட்ட நகராக மாற்றுவதர்காகவும் சென்னையில் இரண்டாவது விமான நிலையமொன்று உருவாக்க மத்திய விமான அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையில் புதிய விமான நிலையம்

சென்னையில் புதிய விமான நிலையம்

இதற்காக சென்னைக்கு அருகே 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கொடுத்தது. அதன்படி திருப்போரூர், படாளம், பரந்தூர் (காஞ்சிபுரம்), பன்னூர் (திருவள்ளூர்) ஆகிய இடங்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றன. இந்த நான்கு இடங்களையும் விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்து அதில் பரந்தூர், பன்னூர் ஆகிய இடங்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் பரந்தூரில் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் வி.கே. சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். இதற்காக பரந்தூரில் 7,000 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவித்தார்.

நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் விமான நிலையம்

நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் விமான நிலையம்

இதற்கான ஐம்பது சதவீத இடம் ஏற்கனவே அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மேலும் ஐம்பது சதவீத இடம் கையகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தின் பணிகள் தொடங்கப்பட்டவுடன், பிற்படுத்தப்பட்ட பகுதியில் நில விலைகள் உயரும் தவிர, 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், வேலை வாய்ப்புகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சுமார் 20 மில்லியன் மக்கள் தங்கக்கூடிய இரண்டு இணையான ஓடுபாதைகள் மற்றும் டெர்மினல்கள் கொண்ட விமான நிலையத்தை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது வணிக கட்டிடங்கள், பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் வசதிகள் மற்றும் விமான ஆதரவு அலகுகளுடன் கணிசமான ஏரோசிட்டியாக கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது

முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது

தற்போது உள்ள சென்னை விமானநிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது. மேலும், தற்போது நடைபெற்றுவரும் விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு, அடுத்த 7 ஆண்டுகளில் சென்னை விமானநிலையம் அதிகபட்ச அளவான ஆண்டிற்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை எட்டக்கூடும். புதிதாக அமையவுள்ள விமானநிலையம், 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது.

மேலும், இந்த திட்டத்தின் உத்தேச திட்டமதிப்பு 20 ஆயிரம் கோடி எனவும், இந்த விமான நிலையத்தில் இரண்டு ஓடுதளங்கள், விமானநிலைய முனையங்கள், இணைப்புப்பாதைகள், விமானங்கள் நிறுத்துமிடம், சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளும் இடம்பெறும் என முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த புதிய விமான நிலையம் முக்கிய மைல் கல்லாக இருக்கும் எனவும் முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.

விமான நிலையம் நகரத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?விமான நிலையம் நகரத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?

விமான நிலையம் நகரத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?விமான நிலையம் நகரத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?

புதிதாக அமைக்கப்படும் விமான நிலையம் சென்னை விமான நிலையத்திலிருந்து 75 கிமீ தூரத்தில் இருக்கிறது. புதிய விமான நிலையத்திற்கு மீனம்பாக்கத்திற்கு பயணிக்க ஒன்றரை மணி நேரம் ஆகும்.

மேலும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 67 கிமீ தொலைவிலும், அடையாறில் இருந்து 76 கிமீ தொலைவிலும், வேளச்சேரியில் இருந்து 71 கிமீ தொலைவிலும், அண்ணாநகரில் இருந்து 63 கிமீ தொலைவிலும், நுங்கம்பாக்கத்தில் இருந்து 66 கிமீ தொலைவிலும், பெங்களூரு சென்னை நெடுஞ்சாலையில் இருந்து 15 கிமீ தொலைவிலும் இருக்கிறது. விரைவில் கட்டப்படும் புதிய பெங்களூரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் இருந்து வெறும் 3 கிமீ தொலைவில் தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X