Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் உள்ள உறைந்த நீர்வீழ்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டது உண்டா? முழு தகவல்கள் இதோ!

இந்தியாவில் உள்ள உறைந்த நீர்வீழ்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டது உண்டா? முழு தகவல்கள் இதோ!

குல்மார்க்கின் டாங்மார்க் தாலுகாவில் அமைந்துள்ள ட்ராங் நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாகும். ட்ராங்கின் படங்களைப் பார்க்கும் எவருக்குமே அங்கு நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனுடைய கூடுதல் அம்சம் இந்த உறைந்த நீர்வீழ்ச்சியாகும். கம்பீரமான மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒரு கண்ணிற்கினிய சொர்க்கம் போல காட்சியளிக்கிறது. கோடைக்காலத்தில் இதிலிருந்து நீர் விழுவதை நாம் பார்த்து ரசிக்கலாம். ஆனாலும் குளிர் காலத்தில் இங்கு வருவதே மிகவும் விசேஷமானது. ஏனென்றால் மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாக குளிர்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைந்துவிடும். உறைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சியைக் காண மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது என்பதே உண்மை!

Waterfall in the seasons

பருவக் காலங்களில் நீர்வீழ்ச்சி

பசுமையான புல்வெளிகள், அழகிய மலைகள், பனி அடர்ந்த உச்சிகள் என இயற்கை அழகு நிரம்பிய கிராமமான ட்ராங்கில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி கோடைக்காலத்தில் மிகவும் ரம்மியமாக உள்ளது. மலைகளுக்கு நடுவே இருந்து பால் போன்று தெளிக்கின்ற நீருற்று நம் மனதை லேசானதாக மாற்றுகிறது. மேலும் சுற்றியுள்ள அருவி, ஏரிகள், நீரோடைகள், புல்வெளிகள் மற்றும் குகைகளை ஆராய்வதன் மூலம் இங்கு ஆனந்தமாக நேரத்தை செலவிடலாம்.
இதே நீர்வீழ்ச்சி, குளிர்காலத்தில் முற்றிலும் உறைந்து காணப்படும். இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலை பனியால் மூடப்பட்டிருக்கும் மற்றும் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும்நீங்கள் பனியைக் காணலாம். அருகாமையிலும், ட்ராங் நீர்வீழ்ச்சியிலும் நீண்ட அடர்த்தியான பனிக்கட்டிகள் தொங்குவதை நீங்கள் கண்டு வியப்பீர்கள்.

Where is the waterfall

நீர்வீழ்ச்சி எங்கே உள்ளது?

ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 42 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த ட்ராங், டாங்மார்க் நகரத்திலிருந்து 3.5 கிமீ தொலைவில் உள்ளது. குளிர்காலத்தில் இந்த இடத்தை ரசிக்க சிறந்த வழி, டாங்மார்க்கிலிருந்து 3 கிமீ நடந்து செல்வதுதான். நடந்து செல்லும் வழி முழுவதும் பனி மூடிய பனோரமிக் காட்சிகளுடன் சாலை ரம்மியமாக உள்ளது. முழு பாதையும் ஒரு விசித்திரக் கதை போன்று தெரிவதால் நடந்து செல்வதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

எப்படி இந்த இடத்தை அடைவது?

ட்ராங்கில் விமான நிலையமோ அல்லது ரயில் நிலையமோ இல்லை. ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையம் ட்ராங்கிலிருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் ஸ்ரீநகரிலிருந்து பேருந்து அல்லது டாக்ஸி மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் ட்ராங்கை அடைந்து விடலாம். நீங்கள் ரயிலில் பயணிக்க விருப்பப்பட்டால் ட்ராங்கிற்கு அருகிலுள்ள ரயில் நிலையமான மஜோமை பயன்படுத்திக் கொள்ளலாம். ரயில் நிலையத்தில் இருந்து 45 நிமிடங்களில் ட்ராங்கை அடைந்து விடலாம்.

When to visit

எப்போது பார்வையிடலாம்?

கோடைக்காலத்தில் ட்ராங்கில் வானிலையானது 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதுவே குளிர்காலத்தில் வானிலையானது ௦ டிகிரிக்கும் குறைவாக உள்ளது. அதாவது டிசம்பர் முதல் பிப்ரவரி இடையிலான நேரத்தில் ட்ராங்கை பார்வையிடலாம், அந்த நேரத்தில் தான் நீர்வீழ்ச்சி உறைந்த நிலையில் இருக்கும்ஆக, இந்த குளிர்காலத்தில் ட்ராங்கிற்கு சென்று வரலாமா! திட்டமிடுங்கள்!

Read more about: frozen waterfall drung kashmir
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X