Search
  • Follow NativePlanet
Share
» »சாகசம் ஒரு பக்கம், ருசிகரமான உணவு ஒரு பக்கம் - இந்தியாவில் உள்ள ஃப்ளை டைனிங் இடங்களின் லிஸ்ட் இதோ!

சாகசம் ஒரு பக்கம், ருசிகரமான உணவு ஒரு பக்கம் - இந்தியாவில் உள்ள ஃப்ளை டைனிங் இடங்களின் லிஸ்ட் இதோ!

ஒரே மாதிரியான ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? கவலை வேண்டாம். ஒரு த்ரில் ஆன, சாகசம் நிறைந்த முறையில் உணவு சாப்பிட வேண்டும் என்று ஆசையாக உள்ளதா? ஏற்கனவே வாட்டர் ரெஸ்டாரண்ட், ஹாரர் பேஸ்டு ரெஸ்டாரண்ட், கிட்ஸ் பேஸ்டு ரெஸ்டாரண்ட் என்று பல ரெஸ்டாரண்ட்டுகள் இந்தியாவில் உள்ளன. ஆனால் வானில் மிதந்தபடி உணவு சாப்பிடும் அனுபவம் உங்களுக்கு கிடைத்தது உண்டா? இது என்ன அதிசயம், விமானத்தில் பறந்தபடி நாம் சாப்பிடலாமே என்று யோசிக்கலாம். ஆனால் விருப்பப்பட்ட உணவு விமானத்தில் கிடைக்குமா? என்ன! அதற்கான ஒரு வாய்ப்பு தான் இங்கு கிடைத்துள்ளது. அவற்றை பற்றிய முழு தகவல்கள் இதோ!

picture1

ஃப்ளை டைனிங் என்றால் என்ன?

நடுவானில் உள்ள உணவகத்தில் எப்போதாவது சாப்பிட்டிருக்கிறீர்களா? உலகின் மிகவும் அசாதாரணமான மற்றும் அற்புதமான உணவு அனுபவங்களில் ஒன்றை நாம் இந்தியாவில் முயற்சிக்கலாம். இந்தியாவில் உள்ள தொங்கும் உணவகங்கள் வானத்தில் இரவு உணவுகளை வழங்குவது மட்டுமல்லாமல், மிகவும் சாகசமான சுவையான அனுபவத்தையும் வழங்குகிறது.

இரவு உணவு, மதிய உணவு, விளையாட்டுகள், செயல்பாடுகள், பொழுதுபோக்கு மற்றும் எதுவாக இருந்தாலும், உங்கள் அன்புக்குரியவருடன் காற்றில் மிதந்தபடி நீங்கள் ஒரு அற்புதமான அனுபவத்தை உருவாக்கலாம். தரையில் இருந்து 50 மீட்டர் உயரத்தில் இடைநிறுத்தப்பட்ட ஒரு மேசையைச் சுற்றி அனைத்தும் சாத்தியமே! அழகான நீல வானத்தில் சுற்றித் திரியும் போது சிறந்த மதிய உணவை உண்பது, சந்தேகத்திற்கு இடமின்றி வாழ்நாள் நினைவைப் பொக்கிஷமாக உங்களுக்கு வழங்கும். எனவே, உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அதை நழுவ விடாதீர்கள்.

picture2

இந்தியாவில் ஃப்ளை டைனிங் இருக்குமிடங்கள்

இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே நீங்கள் இந்த ஃப்ளை டைனிங் அனுபவத்தை பெற முடியும். நீங்கள் ஒரு குழுவிற்கான இடத்தை முன்பதிவு செய்யலாம் அல்லது ஒரு தனி இருக்கையையும் முன் பதிவு செய்யலாம். நீங்கள் முன் பதிவு செய்த நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாகவே அந்த இடத்திற்கு செல்ல வேண்டும். வானில் உங்கள் உணவை யார் வழங்குவார்கள் என்று நீங்கள் யோசித்தால், அதுக்கும் விடை உண்டு. உங்களுடன் பார்டெண்டர், செஃப், உதவி பணியாளர்கள் மற்றும் ஒரு புகைப்படக் கலைஞரும் வருவார்கள்.

இந்தியாவில் முதன்முதலில் ஃப்ளை டைனிங் பெங்களூருவில் தான் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து மணாலி, கோவா, நொய்டா, போர்ட் ப்ளேயர், மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் ஃப்ளை டைனிங்கின் கிளைகள் நிறுவப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

picture3

ஃப்ளை டைனிங் மெனு

இங்கு நீங்கள் ஆர்டர் செய்ய முடியாது. உங்களுக்கு வேண்டுமென்ற உணவை நீங்கள் வருவதற்கு முன்னரே தேர்வு செய்திருக்க வேண்டும். சிக்கன், குரோகெட்ஸ், மற்றும் புருஷெட்டாவுடன் வதக்கிய காய்கறிகள் போன்ற சுவையான உணவுகள் இங்கு வழங்கப்படும் சிக்நேச்சர் டிஷ்களாகும். இந்த உணவு அனைத்தும் விருந்தினர்கள் வருவதற்கு முன்பே தயாரிக்கப்பட்டு நடுவானில் பரிமாறப்படுகிறது. மாக்டெயில் அமர்வு 30 நிமிடங்கள் நீடிக்கும் மற்றும் இரவு உணவு ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக நீடிக்கிறது.

இங்கு வெறும் உணவு மட்டுமல்ல, பார்ட்டிகள், மாநாடுகள், விஐபி சந்திப்புகள், செய்தியாளர் சந்திப்புகள், தயாரிப்பு வெளியீடுகள் மற்றும் இதுபோன்ற பல நிகழ்வுகளும் தனித்துவமான முறையில் நடத்தப்படுகின்றன. ஒரு நபருக்கான கட்டணம் 3500 ரூபாய் முதல் தொடங்கி 10000 வரை உள்ளது, நேரத்திற்கு தகுந்தாற்போலவும் வார இறுதிக்கு தகுந்தாற்போலவும் இந்த கட்டணம் மாறுபடுகிறது.

Read more about: fly dining bangalore goa noida
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X