Search
  • Follow NativePlanet
Share
» »லக்னோவிலிருந்து அந்தமான் தீவுகளுக்கு ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்திய புதிய டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!

லக்னோவிலிருந்து அந்தமான் தீவுகளுக்கு ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்திய புதிய டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!

லக்னோ வாசிகளுக்கு ஒரு நற்செய்தி! ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் லக்னோவில் இருந்து அந்தமானுக்குச் செல்ல விரும்பும் பயணிகளுக்காக புதிய டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளுக்கிடையே பெறும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சுற்றுலா செல்ல வேண்டும் என்ற எண்ணம் நம் எல்லோருக்குமே இருந்தாலும் கூட, அதை சாத்தியப்படுத்த போக்குவரத்து, தங்குமிடம், கேப், உணவு என நாம் அனைத்தையும் பார்த்து பார்த்து திட்டமிட வேண்டும். ஆனால் இந்த பேக்கேஜில் நாம் அது போன்ற எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியது இல்லை. ஏனென்றால் நமக்கு தேவையான அனைத்தும் இந்த பேக்கேஜிலேயே அடங்கி விடுகிறது.

ஐஆர்சிடிசி இன் டூர் பேக்கேஜ்கள்

ஐஆர்சிடிசி இன் டூர் பேக்கேஜ்கள்

இதற்கு முன் ஐஆர்சிடிசி இதேபோன்று ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் மற்றும் தேகோ அப்னா தேஷ் ஆகிய டூர் பேக்கேஜ்களின் கீழ் ஆறு பகல் மற்றும் ஏழு இரவுகளுக்கு தென்னிந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

பத்மநாபசுவாமி கோயில், விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னம், ராமநாதசுவாமி கோயில், மீனாட்சி கோயில், பாலாஜி கோயில் மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி போன்ற இந்திய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பல இடங்களை இந்த தொகுப்பு உள்ளடக்கியது. டூர் பேக்கேஜின் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.59,760 ஆகவும், இருவருக்கு ரூ.47,190 ஆகவும் இருந்தது.

லக்னோவிலிருந்து அந்தமானுக்கு சுற்றுலா

லக்னோவிலிருந்து அந்தமானுக்கு சுற்றுலா

அதே போன்று அந்தமான் தீவுகளுக்கு பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்காக இந்த டூர் பேக்கேஜ் ஐஆர்சிடிசி ஆல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. லக்னோ-அந்தமான் தீவுகள் சுற்றுப்பயணம் 6 நாள் பேக்கேஜ் ஆகும், இது லக்னோவிலிருந்து கொல்கத்தா ரயில் பயணத்துடன் தொடங்குகிறது. கொல்கத்தாவில், பயணிகள் விக்டோரியா மெமோரியா மற்றும் காளிகாட் கோவிலுக்குச் செல்லலாம். அங்கிருந்து பயணிகள் விமானம் மூலம் அந்தமான் தீவுகளுக்குச் செல்வார்கள்.

அந்தமானில், சாமுத்ரிகா- கடற்படை கடல் அருங்காட்சியகம், கோர்பின் கோவ் கடற்கரை, ஆசியாவின் மிகச்சிறந்த கடற்கரையான ராதாநகர் கடற்கரை, பரதாங் மற்றும் கலாபதர் கடற்கரை , போர்ட் பிளேயரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செல்லுலார் சிறை மற்றும் அந்தமானில் உள்ள மேலும் சில புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்வார்கள். பயணிகளுக்கான உணவும் இந்த பேக்கேஜின் கீழ் வந்துவிடுவதால் வகை வகையான சைவ, அசைவ, கடல் உணவுகளையும் நீங்கள் சுவைத்து மகிழலாம்.

பேக்கேஜ்க்கான கட்டணம் மற்றும் பிற விவரங்கள்

பேக்கேஜ்க்கான கட்டணம் மற்றும் பிற விவரங்கள்

லக்னோவில் இருந்து அந்தமான் வரை பயணிக்க ஒரு நபரின் கட்டணம் ரூ.65,900 ஆகும். இரண்டு நபர்கள் கொண்ட குழுவில் ஒரு நபருக்கான கட்டணம் ரூ.53,785 ஆகவும் மூன்று பேர் கொண்ட குழுவில் ஒரு நபருக்கான கட்டணம் ரூ.53,295 ஆகவும் குறைகிறது. பெற்றோருடன் தங்குவதற்கு, ஒரு குழந்தைக்கான பேக்கேஜ் ரூ.49,335 (படுக்கைகள் உட்பட) மற்றும் ரூ.46,620 (படுக்கைகள் இல்லாமல்) வசூலிக்கப்படும்.

சுற்றுப்பயணம் செப்டம்பர் 23 முதல் தொடங்கி செப்டம்பர் 28 அன்று முடிவடைகிறது. எனவே, விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது நல்லது. முன்பதிவு செய்ய, இந்த பயண பயணிகள் IRCTC இணையதளம் www.irctctourism.com மூலம் ஆன்லைனில் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். லக்னோவின் கோமதி நகர், பர்யாதன் பவனில் அமைந்துள்ள IRCTC அலுவலகத்திலும் முன்பதிவு செய்யலாம்.

நேரம் வீணாக்காமல் டிக்கெட்டுகளை இப்போதே முன்பதிவு செய்து உற்சாகமாக குடும்பம்மற்றும்நண்பர்களுடன் சுற்றுலா சென்று வாருங்கள்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X