Search
  • Follow NativePlanet
Share
» »துர்கா பூஜை 2022: ஸ்ரீபூமி பந்தல் வாடிகனின் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவாக மாறியுள்ளது!

துர்கா பூஜை 2022: ஸ்ரீபூமி பந்தல் வாடிகனின் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவாக மாறியுள்ளது!

துர்கா பூஜை என்றால் அதற்கு பெயர் பெற்ற மாநிலம் மேற்கு வங்கம் தான்! துர்கா பூஜை மேற்கு வங்காளத்தின் மிகப்பெரிய பண்டிகையாகும், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதை பெரு மாதக் காலமாக நாம் செய்தியில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த துர்கா பூஜை இன்று தொடங்கிவிட்டது.

கொல்கத்தாவின் புகழ்பெற்ற பந்தல்களின் முதன்மையான ஸ்ரீபூமி பூஜை பந்தல் , ஒவ்வொரு ஆண்டும் அதன் புதுமையான கருப்பொருளுக்காக (தீம்) அறியப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியாவின் கலாச்சார தலைநகரை வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவாக மாற்றியுள்ளனர். அதுவே இந்த வருடத்திற்கான தீம் ஆகும்.

fds1nuwakae846a-1664199150-1664258030.jpg -Properties

மிகவும் உற்சாகமாகவும் கோலாகலத்துடனும் கொண்டாடப்படும் துர்கா பூஜை என்பது அன்னை துர்காதேவியை சிறப்பித்து அவரை மகிழ்விக்கவே நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரியின் முதல் நாளான இன்று இந்தியா முழுவதும் துர்க்கை மாதாவை வீட்டிற்கு கொண்டு வர தயாராகி உள்ளது.

கொல்கத்தாவின் பிதான்நகரில் உள்ள ஸ்ரீபூமி பூஜை பந்தல், ஆண்டுதோறும் மிகவும் ஆக்கப்பூர்வமான கருப்பொருளைத் (தீம்) தேர்ந்தெடுக்கும் ஒரு பிரபலமான பந்தலாகும். அவர்கள் இந்த ஆண்டு வாடிகன் நகரத்தின் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவை கருப்பொருளாகப் பிரதியெடுத்துள்ளனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஸ்ரீபூமி பூஜை பந்தல் இந்த ஆண்டு தனது 50 ஆண்டு பொன் விழாவையும் கொண்டாடுகிறது. நிச்சயமாக, இந்த தீம் சிறப்பு வாய்ந்ததாகவும் மற்றும் மறக்கமுடியாததாகவும் இருக்க வேண்டும் அல்லவா!

fdsbch-auaes5hv-1664199162-1664258047.jpg -Properties

மேற்கு வங்காள தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அமைச்சரும் ஸ்ரீபூமி ஸ்போர்ட்டிங் கிளப் தலைவருமான சுஜித் போஸ் ஒரு ஊடகப் பேட்டியில், ரோமில் உள்ள வாடிகன் நகரத்தைப் பற்றி மக்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள், இருப்பினும், சில அதிர்ஷ்டசாலிகள் மட்டுமே அதைப் பார்க்க வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். எனவே, வாடிகன் நகரத்திற்குச் செல்லும் மக்களின் விருப்பத்தை தீம் நிறைவேற்றும் என்று கூறியுள்ளார்.

பந்தல் குறித்து மேலும் தெரிவித்த அவர், 100க்கும் மேற்பட்ட கைவினைஞர்களின் உதவியுடன் இந்த பந்தலை உருவாக்கி முடிக்க 60 நாட்கள் ஆனது என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு, ஸ்ரீபூமி பூஜை பந்தல் புர்ஜ் கலீஃபா (உலகின் மிக உயரமான கட்டிடம்) தீம் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

fdsa92hacaen6pm-1664199139-1664258039.jpg -Properties

ஸ்ரீபூமி பூஜை பந்தலின் இந்த பிரம்மாண்டத்தைக் காண இந்தியா முழுவதிலுமிருந்து மக்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் ஒருமுறை பாகுபலி தீமை வடிவமைத்திருந்தனர், அது திரைப்படத்திலிருந்து நேரடியாக வெளியே வருவது போல் இருந்தது. பந்தலின் உறுப்பினர்கள் திருவிழாவின் முக்கியத்துவத்தை அறிந்து, ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவதை உறுதிபடுத்துகின்றனர்.

துர்கா தேவி மகிஷாசுரனை வென்றதை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் இவ்விழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. நாடு முழோவதும் பத்து நாளும் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இருக்காது. தங்களால் முடிந்தால் கொல்கத்தாவின் துர்கா பூஜையில் கலந்துக் கொண்டு பாருங்கள். அடுத்த முறையும் நீங்கள் அங்கேயே செல்வீர்கள்!

Read more about: kolkata west bengal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X