Search
  • Follow NativePlanet
Share
» »சுதந்திர தின லால்பாக் மலர் கண்காட்சி 2022 - தேதிகள், நேரம், நுழைவு கட்டணம் மற்றும் பிற விவரங்கள் இதோ!

சுதந்திர தின லால்பாக் மலர் கண்காட்சி 2022 - தேதிகள், நேரம், நுழைவு கட்டணம் மற்றும் பிற விவரங்கள் இதோ!

பெங்களூரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லால்பாக் மலர் கண்காட்சி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெகு விமர்சியாக தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு லால்பாக் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

தோட்டக்கலைத் துறை மற்றும் மைசூர் தோட்டக்கலை சங்கம் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கின்றன, இந்த மலர் கண்காட்சி கார்டன் சிட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.
ஜீரோ-வேஸ்ட், ஜீரோ-பிளாஸ்டிக் மற்றும் ஜீரோ-லிட்டரிங் என்ற கருத்தை மையமாக கொண்டு இம்முறை கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனைப் பற்றிய மேலும் சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காண்போம்!

சுதந்திர தின லால்பாக் மலர் கண்காட்சி 2022

சுதந்திர தின லால்பாக் மலர் கண்காட்சி 2022

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, அதாவது முந்தைய நான்கு மலர் கண்காட்சிகள் ரத்து செய்யப்பட்டு

லால்பாக் மலர் கண்காட்சியின் 212வது பதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 5 ஆம் தேதி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.

இந்த சுதந்திர தினமான லால்பாக் மலர்க் கண்காட்சி 2022, கழிவுகள் இல்லாத, பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றும் நிகழ்வாகும், இந்த மெகா நிகழ்வின் போது 10 முதல் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு கண்காட்சியின் சிறப்பம்சங்கள்

2022 ஆம் ஆண்டு கண்காட்சியின் சிறப்பம்சங்கள்

ஊட்டி, நியூசிலாந்து, அமெரிக்கா, ஹாலந்து, அர்ஜென்டினா, கென்யா மற்றும் பல நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர்களும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர்களும் மலர் கண்காட்சியை அலங்கரிக்கின்றன.

கண்ணாடி மாளிகையில் உள்ள 3.5 லட்சம் பூந்தொட்டிகளிலும் ஆண்டு முழுவதும் பூக்கும் 65 வகைகளுக்கு மேலான மலர்கள் காட்சிப்படுத்தப்படும்.

ஊட்டியில் இருந்து 20 வகையான மிதமான மலர்கள், 10 நாடுகளைச் சேர்ந்த டூலிப்ஸ், ஹைட்ரேஞ்சா, ஹைபரிகம் பெர்ரி உள்ளிட்ட 27 வகையான மலர்கள் மற்றும் கப்பன் பார்க், நந்தி ஹில்ஸ், ஊட்டி, கெம்மண்ணுகுண்ட் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரும் மலர்கள் ஆகிய அனைத்தும் கண்காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மொத்த செலவும் ரூ.2.5 கோடியை தொட்டுவிடும் என்று கூறப்படுகிறது.

லால்பாக் மலர் கண்காட்சி 2022 இன் தீம்

லால்பாக் மலர் கண்காட்சி 2022 இன் தீம்

இந்த பதிப்பு கடந்த ஆண்டு மறைந்த அன்பான நடிகரான டாக்டர் புனித் ராஜ்குமார் மற்றும் கன்னட கலாச்சார சின்னம் என்று போற்றப்படும் அவரது தந்தை டாக்டர் ராஜ்குமாருக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

அவர்களின் சேவையையும், நல்ல உள்ளத்தையும் கௌரவிக்கும் பொருட்டு இம்முறை மலர் கண்காட்சியின் தீம் அவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி முடியும் வரை டாக்டர் ராஜ் குமார் மற்றும் புனித் அவர்களின் சமாதியிலும், லால்பாக்கிலும் டார்ச் லைட் ஏற்றப்படும். டாக்டர் ராஜ்குமாரின் கஜனுரு இல்லம் மற்றும் புனித் ராஜ்குமாரின் சக்தி தாமா என்ற மறுவாழ்வு மையத்தின் பிரதிகள் ரோஜாக்கள் மற்றும் கிரிஸான்தமம் பூக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன. மறைந்த கலைஞர்கள் கண்ணாடி மாளிகையை அலங்கரிக்கும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சிற்பங்களில் நினைவுகூரப்பட்டனர்.

தேதி, நேரம் மற்றும் நுழைவுக்கட்டணம்

தேதி, நேரம் மற்றும் நுழைவுக்கட்டணம்

ஆகஸ்ட் 5 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த கண்காட்சி ஆகஸ்ட் 15 வரை தொடர்ந்து நடைபெறுகிறது.இந்த இடைப்பட்ட நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கண்காட்சிக்கு செல்லலாம். பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம்

வார நாட்களில் ரூ.70 ஆகவும், வார இறுதி நாட்களில் ரூ.100 ஆகவும்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான நுழைவுக் கட்டணம் வார நாட்களில் ரூ.20 ஆகவும் வார இறுதி நாட்களில் ரூ.3௦ ஆகவும்
வசூலிக்கப்படுகிறது

பார்க்கிங் வசதி

பார்க்கிங் வசதி

சாந்திநகர் பேருந்து நிலையம், ஜேசி சாலையில் உள்ள BBMP கார் நிறுத்துமிடம் ஆகியவற்றில் கார் பார்க்கிங்
செய்து கொள்ளலாம். அல்-அமீன் கல்லூரியில் மற்றும் டபுள் ரோடு கேட் அருகே உள்ள HOPCOMS வளாகத்தில் இருசக்கர வாகனங்களை பார்க்கிங்

செய்து கொள்ளலாம். அரங்கத்தின் நான்கு வாயில்களின் வழியாகவும் நீங்கள் நடைபாதையாக உள்ளே செல்லலாம்.

லால்பாக்கிற்குள் தனியார் வாகனங்கள் நுழைய தோட்டக்கலைத்துறை தடை விதித்துள்ளது. பள்ளி பேருந்துகள் மட்டும் டபுள் ரோடு வழியாக தோட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

எப்படி மலர் கண்காட்சியை அடைவது?

எப்படி மலர் கண்காட்சியை அடைவது?

லால்பாக்கை அடைய சிறந்த வழி மெட்ரோ ஆகும். கிரீன் லைனில் எலச்செனஹள்ளி நோக்கிப் பயணித்து லால்பாக் நிலையத்தில் இறங்கவும்.

நீங்கள் பேருந்தில் பயணம் செய்ய விரும்பினால் 4 கிமீ தூரத்தில் அமைந்துள்ள கெம்பேகவுடா பேருந்து நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.

நீங்கள் வார நாட்களில் செல்ல முடியாவிட்டாலும், வரவிருக்கும் விடுமுறை நாட்களை பயன்படுத்தி ஒரு முறை உங்கள் குழந்தைகளையும் குடும்பத்தினரையும் இங்கே மறக்காமல் அழைத்து சென்றுவிட்டு வாருங்கள்! அவர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X