Search
  • Follow NativePlanet
Share
» »உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் ‘மோடி சர்க்யூட்’ – தகவல்கள் இதோ!

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் ‘மோடி சர்க்யூட்’ – தகவல்கள் இதோ!

ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் 2019 ஆம் ஆண்டில்
பியர் கிரில்ஸ் உடன் படமாக்கப்பட்ட 'மேன் வெர்சஸ் வைல்டு'
என்ற ரியாலிட்டி ஷோவின்

சிறப்பு எபிசோடில் பிரதமர் நரேந்திர மோடி
சென்ற இடங்கள் மற்றும் செய்த செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு சர்க்யூட்டை உத்தரகாண்ட் மாநில சுற்றுலாத் துறை உருவாக்கி வருகிறது.

உத்தரகாண்ட் சுற்றுலாத் துறையின் முயற்சிகள்

உத்தரகாண்ட் சுற்றுலாத் துறையின் முயற்சிகள்

உத்தரகாண்ட் அரசு மா பகவதி, சிவன், விஷ்ணு, நவ்-கிரா, கோல்ஜு மகாராஜ், நாக்தேவ்தா, ஹனுமான் மற்றும் விவேகானந்தர்
ஆகியோருக்கான சுற்றுலா சர்க்யூட்களை உருவாக்கி வருகிறது. அடுத்ததாக அந்த லிஸ்டில் 'மோடி சர்க்யூட்' சேர உள்ளது.

உத்தரகாண்ட் சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தின் சாகச விளையாட்டுப் பிரிவின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி கர்னல் அஷ்வினி பண்டிர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி நம் காலத்தில் பெரும் செல்வாக்கு மிக்கவர் என்பதால், அவர் செல்லும் இடங்கள் மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

மேன் வெர்சஸ் வைல்ட்டில் பிரதமர் மோடி

மேன் வெர்சஸ் வைல்ட்டில் பிரதமர் மோடி

சாகச வீரர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கிய "மேன் வெர்சஸ் வைல்ட்" சிறப்பு எபிசோடில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார். ஆகஸ்ட் 2019 இல் ஒளிபரப்பப்பட்ட இந்த ரியாலிட்டி ஷோ சமூக ஊடகங்களில் பெரும் புயலை உருவாக்கியதை யாரும் மறக்க முடியாது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் புலிகள் காப்பகத்தின் ஆபத்தான காடுகளை விளையாட்டாகக் கடந்து சென்றார். புலியின் கால்தடங்களை கடந்து மலையேற்றம், இமயமலை ஆற்றின் குறுக்கே கார்க்கிள் சவாரி செய்தல், கொட்டும் மழையில் ஒரு கோப்பை தேநீரை பகிர்ந்து கொள்வது, என பிரதமர் மோடி மற்றும் பியர் கிரில்ஸ் காட்டில் ஒன்றாக இருந்த தருணங்கள் இந்தியர்களின் மனதில் பதிந்துள்ளன.

ஜிம் கார்பெட்டில் மோடி சர்க்யூட்

ஜிம் கார்பெட்டில் மோடி சர்க்யூட்

குரோஷியாவுக்குச் சென்றிருந்தபோது கேம் ஆப் த்ரோன்ஸ் சுற்றுப்பயணத்தைப் பற்றி கேள்விப்பட்டபோது, 'மோடி சர்க்யூட்' என்ற எண்ணம் தனக்குத் தோன்றியதாக உத்தரகாண்ட் சுற்றுலாத் துறை அமைச்சர் சத்பால் மகராஜ் கூறினார்.

"சுற்றுலாப் பயணிகள் புதியதை விரும்புகிறார்கள். உத்தரகாண்டில் உள்ள ஒவ்வொரு இடமும் அழகாக இருக்கிறது, ஆனால் ஈர்ப்பு மற்றும் சில செயல்பாடுகளை நாம் சேர்க்க வேண்டும். இந்த சர்க்யூட் மூலம், நாங்கள் அதை அடைய திட்டமிட்டுள்ளோம், "என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காப்பகத்திற்குள் பிரதமர் மற்றும் பியர் கிரில்ஸ் பார்வையிட்ட இடங்கள் முதலில் அடையாளம் காணப்படும் என்றும், அதன்பிறகு அந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல என்னென்ன ஏற்பாடுகள் செய்யலாம் என்பது குறித்து ஆராயப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஏற்கனவே பிரபலமான சுற்றுலாத் தலமாக இருக்கும் கார்பெட் புலிகள் காப்பகத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு 'மோடி சர்க்யூட்' மேலும் உதவும் என்றும் அவர் கூறினார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X